OTT Movies: அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க சூப்பரான படம்!

Best Action Movies: 2020 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு ஆக்‌ஷன் திரில்லர் "லாஸ்ட் புல்லட்" படத்தைப் பற்றிப் பார்க்கலாம். திருடன் ஒருவன் போலீசாருடன் இணைந்து போதைப் பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்கும் கதைக்களம் இது. விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த இந்தப் படமானது சினிமா ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கிறது.

OTT Movies: அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க சூப்பரான படம்!

Lost Bullet பட,ம்

Published: 

16 Jun 2025 09:30 AM

விறுவிறுப்பான படம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் ட்விஸ்ட்கள் அடங்கிய படமென்றால் சினிமா ரசிகர்களுக்கு தீனி போட்டது போல தான். அப்படி ஒரு படம் தான் 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியானது. Lost Bullet என பெயர் கொண்ட அந்த படத்தை குய்லூம் பியர்ரெட் (Guillaume Pierret) இயக்கியிருந்தார். படத்தின் கதையை குய்லூம் பியர்ரெட், அல்பன் லெனோயர் மற்றும் கமல் கும்ரா ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர். இப்படத்தில் அல்பன் லெனோயர் (Alban Lenoir) ,நிக்கோலஸ் டுவாச்செல்,ராம்ஸி பெடியா,ஸ்டீஃபி செல்மா,ராட் பாரடோட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மோர்கன் எஸ். டாலிபர்ட் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு ஆண்ட்ரே டிஸுக் இசையமைத்திருந்தார்.

படத்தின் கதை

ஓட்டுநரான படத்தின் ஹீரோ அல்பன் லெனோயர் ஒரு திருடன். பலமுறை சிறை சென்ற குற்றவாளியாவார். தெற்கு பிரான்சில் தன்னுடைய திருட்டுக்கான காரை வடிவமைத்து ஓரிடத்தில் திருட செல்கிறான். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த திட்டம் தோல்வியில் முடிவடைகிறது. அல்பன் லெனோயர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார். இப்படியான நிலையில் துப்பறியும் போலீஸ் அதிகாரியான ராம்ஸி பெடியா அவரின் திறமையை அறிந்து அல்பன் லெனோயரை போதைப்பொருள் குழுவில் இடம் பெறச் செய்கிறார். போதைப்பொருள் கடத்தல்காரர்களை வேகமாக விரட்டிச் சென்று பிடிக்க போலீஸ் கார்களை வடிவமைக்கும் பொறுப்பு ஹீரோவுக்கு வழங்கப்படுகிறது.

தன்னுடைய பணியை கச்சிதமாக செய்து முடிக்கும் அல்பன் லெனோயருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஒரு வேலையும் ராம்ஸி பெடியாவால் வாங்கி கொடுக்கப்படுகிறது. ஆனால் அதே போலீஸ் துறையில் பணியாற்றும் நிக்கோலஸ் டுவாச்செல் ராம்ஸி பெடியாவை கொலை செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஹீரோ அல்பன் லெனோயர் என்ன காரணம் என விசாரிக்கையில் அது நிக்கோலஸ் மற்றும் போதைப் பொருள் கும்பல் திட்டத்தால் நடைபெற்றது என தெரிய வருகிறது. இதற்கிடையில் ராம்ஸியை கொன்றது அல்பன் தான் என நிக்கோலஸ் கதையை மாற்ற அவர் கைது செய்யப்படுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கும் அல்பன் லெனோயர் உண்மையை வெளிக்கொண்டு வந்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.

படத்தின் சிறப்புகள்


இந்தப் படம் சில விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விறுவிறுப்பான திரைக்கதைப் பாராட்டைப் பெற்றது. Lost Bullet படம் வெளியான 6 மாதங்களிலேயே அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அப்படம் 2022ல் ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 3ஆம் பாகம் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தை நாம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்க முடியும். வாய்ப்பிருப்பவர்கள் நல்ல விறுவிறுப்பான படம் பார்க்க விரும்பினால் இதனை தாராளமாக பார்க்கலாம்.