OTT Movies: சுறாவிடம் சிக்கும் 5 பேர்.. திக் திக் நிமிடங்கள்.. இந்த படம் பாருங்க!

Best Action - Horror Films: பசிபிக் பெருங்கடலில் மாபெரும் சுறாவை வேட்டையாடும் குழுவின் பயங்கரமான அனுபவங்களைச் சொல்லும் கதையாக Under Paris எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான நடிப்பும், சுவாரஸ்யமான காட்சிகளும் கொண்ட இப்படம், பிற சுறா படங்களிலிருந்து வேறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கிறது.

OTT Movies: சுறாவிடம் சிக்கும் 5 பேர்.. திக் திக் நிமிடங்கள்.. இந்த படம் பாருங்க!

Under Paris பட,ம்

Published: 

19 Jun 2025 08:59 AM

சினிமா ரசிகர்களுக்கு சில படங்களில் மிகச்சிறப்பான திருப்தியை அளிக்கக்கூடிய கதைக்களமாக இருக்கும். சில படங்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கக்கூடியதாக இருக்கும். இப்படியான நிலையில் உயிரினங்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்கள் யாவும் சோடை போனதில்லை என்பதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு மொழியில் வெளியான ஒரு ஆக்‌ஷன் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த படம் தான் “Under Paris”. சேவியர் கென்ஸ் இயக்கிய இந்தப் படத்தில் அவர்யானிக் டஹான், மௌட் ஹேவாங், யேல் லாங்மேன் மற்றும் ஆலிவர் டோரஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நிக்கோலஸ் மாசார்ட் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு அந்தோணி டி அமாரியோ இசையமைத்திருந்தார். இப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் காண கிடைக்கும் நிலையில் இதன் கதை உள்ளிட்ட படம் தொடர்பான விஷயங்களை நாம் காணலாம்.

படத்தின் கதை

பசிபிக் பெருங்கடலின் குப்பைத் தொட்டி என அழைக்கப்படும் குப்பைகள் நிறைந்த ஓரிடத்தில் ஒரு குழு செல்கிறது. அவர்கள் லிலித் என்ற ஒரு மாகோ சுறாவைத் தேடி பயணிக்கிறார்கள். கடல் ஆராய்ச்சியாளர் சோபியா அஸ்ஸலாஸ் தான் இந்த குழுவை வழி நடத்துகிறார். அதில் சோபியாவின் கணவர் உட்பட 5 பேர் இடம்பெறுகிறார்கள்.

தங்களது தேடுதல் வேட்டையின் தொடக்கத்தில் கணவர் கிறிஸ் சாம், ஜுவான் மற்றும் டாம் ஆகியோர் சுறாவை தேடி கடலுக்குள் குதிக்கிறார்கள். இவர்களை நோக்கி வரும் சுறா ஆக்ரோஷத்தில் 3 பேரையும் கொன்று விடுகிறது.

லிலித் சுறா முன்பை விட பெரிதாகி விட்டதும், ஆக்ரோஷமாக செயல்படுகிறது எனவும் சோபியாவுக்கு புரிய வருகிறது. 3 பேரையும் கொன்றதால் உள்ளே குதிக்கும் சோபியா ஒரு வலையில் சிக்கி கடலின் ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறாள். பின்பு அங்கிருந்து தப்பித்து விடுகிறாள்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சோபியா பாரிஸில் இருக்கும் மீன்வளம் கொண்ட இடத்தில் பணியாற்றுகிறார். மீண்டும் அந்த சுறாவை வேட்டையாட அமைக்கப்படும் குழுவுக்கு இவள் தலைமையேற்கும் சூழல் ஏற்படுகிறது. இம்முறை என்ன செய்கிறாள், அந்த சுறா வேட்டையாடப்பட்டதா என்பதே இப்படத்தின் கதையாகும்.இதில் சோபியாவாக பெரனிஸ் பெஜோவும், கிறிஸாக யானிக் சோய்ராட்வும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.

படத்தின் சிறப்புகள்


இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களை கொண்ட படம் என்ற சிறப்பைப் பெற்றது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் பார்க்கப்பட்ட நான்காவது படமாக அமைந்தது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் சுறா தொடர்பான காட்சிகள் சிலிர்க்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த படம் பிற சுறா படங்களிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. வாய்ப்பிருந்தால் நீங்கள் இப்படம் பார்த்து மகிழுங்கள்.