OTT Movies: தாயை தேடும் பெண்ணுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பரபரப்பான த்ரில்லர் படம்!

தாயைத் தேடும் 18 வயது ஜூன் ஆலனின் கதையைச் சொல்கிறது. கொலம்பியாவில் விடுமுறைக்குச் சென்ற தாய் திரும்பவில்லை. விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர, ஜூன் தனது தாயைக் கண்டுபிடிக்க போராடுகிறாள். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே Missing படத்தின் கதையாகும்.

OTT Movies: தாயை தேடும் பெண்ணுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பரபரப்பான த்ரில்லர் படம்!

Missing படம்

Published: 

30 Jun 2025 09:28 AM

 IST

ஹாலிவுட்டில் வெளியாகும் படங்கள் யாவும் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்டவையாக இருந்தாலும் அவை திரைக்கதையால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும். அதில் சில படங்கள் நம்மையே கதைக்குள் ஈர்க்கும் அளவுக்கு சிறப்பாக அமையும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு வெளியான Missing என்ற படத்தைப் பற்றி நாம் காணலாம். இப்படத்தின் கதையை சேவ் ஓஹானியன் மற்றும் அனீஸ் சாகந்தி ஆகியோர் சேர்ந்து எழுதியிருந்தனர். வில் மெரிக் மற்றும் நிக் ஜான்சன் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியிருந்தனர். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியான Searching என்ற படத்தின் யூனிவர்ஸில் இடம்பெற்றது. Missing படத்தில் ஸ்டார்ம் ரீட்,மேகன் சூரி,ஜாஸ்மின் சவோய் பிரவுன்,ஜோகிம் டி அல்மேடா,கெவின் லியுங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஸ்டீவன் ஹோலரன் ஒளிப்பதிவு செய்ய ஜூலியன் ஷெர்லே இசையமைத்திருந்தார்.

படத்தின் கதை


தந்தை இல்லாத தாய் கிரேஸின் அரவணைப்பில் வளரும் 18 வயதான ஜூன் ஆலன், லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறாள். இருவருக்கிமிடையே நல்ல நெருக்கம் இருக்கும் நிலையில் கிரேஸ் ஜூனின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகமாக தலையீடுவதை மகள் விரும்பவில்லை. இதனிடையே கிரேஸ் தனது காதலனுடன் விடுமுறைக்காக கொலம்பியாவின் கார்டகேனாவுக்கு சென்று விடுகிறாள். ஜூனுக்கு பாதுகாப்பாக கிரேஸ் தனது வழக்கறிஞர் நண்பர் ஹீதரை நியமிக்கிறார். ஆனால் அவரை தவிர்க்கும் முயற்சியில் ஜூன் பல்வேறு விருந்துகளில் நேரத்தைச் செலவிடுகிறாள்.

இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஒரு வாரம் கழித்து, ஜூன் தனது தாய் மற்றும் அவரது காதலருக்காக காத்திருக்கிறார். ஆனால் அவர்கள் வரவில்லை. ஹோட்டலுக்கு போன் செய்து விசாரித்தபோது அவர்கள் தங்கியிருந்த அறையில் பொருட்கள் அப்படியே இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையில் ஜூன் இறங்கும்போது பல அதிர்ச்சியான தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன்பிறகு காணாமல் போன தனது தாயை அவர் கண்டுபிடித்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.

படம் பற்றிய பிற தகவல்கள்

Searching படத்தின் யூனிவர்ஸில் Missing படம் இருந்தாலும் அது Searching படத்தின் கதை அல்லது கேரக்டர்களின் தொடர்ச்சியாக இருக்காது என தெரிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது. கொரோனா வெளியீடு காரணமாக 2021ல் எடுக்கப்பட்ட இப்படம் 2023ஆம் ஆண்டில் தான் வெளியானது. உலகளவில் மொத்தம் 48.8 மில்லியன் டாலர்கள் வசூலை வாரிக்குவித்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது. நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தது. விறுவிறுப்பாக படம் பார்க்க நினைப்பவர்கள் இதனை கண்டிப்பாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?