15 ஆண்டுகளை நிறைவு செய்த நான் மகான் அல்ல படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
15 Years Of Naan Mahaan Alla: நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் நான் மகான் அல்ல. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்த அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.

நான் மகான் அல்ல
நடிகர் கார்த்தி (Actor Karthi) நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நான் மகான் அல்ல. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியின் ஜோடியாக நடிகை காஜக் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜெயபிரகாஷ், சூரி, ராமச்சந்திரன் துரைராஜ், விஜய் சேதுபதி, லட்சுமி ராமகிருஷ்ணன், ரவி பிரகாஷ், நீலிமா ராணி, மிஷா கோஷல், உதய் மகேஷ், அருள்தாஸ், சிங்கம்புலி, வினோத் கிஷன், தஞ்சை மகேந்திரன், அருண், அன்புராஜ், இம்மானுவேல், ஹரி வைரவன், ராஜீவன், சத்யா, பிரியா அட்லி,
சிந்து, காயத்ரி துட்லு, ஷாதிகா பானு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பாக தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தின் கதை என்ன?
நடிகர் கார்த்தி அவரது அப்பா ஜெயபிரகாஷ் மற்றும் அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன், தங்கை பிரியா அட்லி உடன் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். படித்து முடித்துவிட்டு வேலை தேடிவரும் கார்த்திக்கு நண்பர் சூரி மூலமாக வேலை கிடைக்கிறது. அந்த வேலைக்கு சென்ற உடன் அவரின் தங்கையான பிரியாவிற்கு நல்ல வரன் வந்துள்ளது என்று திருமணம் பேசி முடிக்கிறார்கள்.
இந்த திருமண நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போதே கார் ட்ரைவாராக இருக்கும் ஜெயபிரகாஷ் ஒரு பெண்ணின் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக ஆஜர் ஆகிறார். அதனைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்படுகிறார். தனது தந்தை ஜெயபிரகாஷின் கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடிக்கிறார் கார்த்தி. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வெளியகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தினை தற்போது எம் எக்ஸ் ப்ளேயரில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பூஜையுடன் தொடங்கியது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் புது படம்
நான் மகான் அல்ல குறித்து சன் டிவி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
15 Years Of Naan Mahaan Alla❤️🎧#SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #NaanMahaanAlla #Karthi #KajalAggarwal #Yuvan #YuvanShankarRaja #U1 pic.twitter.com/Pni8thRmtX
— Sun Music (@SunMusic) August 20, 2025
Also Read… கூலி படத்தில் 4 நிமிட காட்சி நீக்கம்… சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கலாம்!