Coolie : கூலி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வேண்டும்.. சென்னை ஹைகோர்ட்டில் சன் பிக்சர்ஸ் மனு!
Coolie Movie Censor Certificate Controversy : தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கூலி. இப்படத்திற்கு சென்சார் குழு ஏ தரச் சான்றிதழை வழங்கியிருந்தது. அதை யு/ஏ சான்றிதழாக மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் பிக்சர்ஸ் மனு அளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). இடமானது அவரின் 171வது படமாக, பான் இந்திய மொழிகளில் வெளியானது. இப்படத்தைத் தமிழின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனமானது சுமார் ரூ 355 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு சென்சார் குழு “ஏ” தரச் சான்றிதழை வழங்கியிருந்தது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே , திரையரங்குகளில் சென்று கூலி படத்தை பார்க்கமுடியும்.
இப்படத்தில் அந்த அளவிற்கு வன்முறை காட்சிகள் பெரிதாக இல்லை என்ற காரணத்தினால், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் கூலி படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) மனு அளித்துள்ளது. இந்த மனுவானது தற்போது விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவலானது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : தமிழில் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சசிகுமார்தான் – இயக்குநர் முத்தையா பேச்சு!
கூலி படம் சன் பிக்ச்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Experience the storm of emotions and mass with #Coolie in theatres near you!🖤🔥#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica… pic.twitter.com/Ez9WZmEdrI
— Sun Pictures (@sunpictures) August 19, 2025
கூலி படத்திற்கு “ஏ” சென்சார் சான்றிதழ் :
நடிகர் ரஜினிகாந்தின் கூலி படமானது கடந்த 2025 , ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் வெளியிட்டிருக்கும் முன்னே சென்சார் குழு இப்படத்திற்கு ஏ தரச் சான்றிதழை வழங்கியிருந்தது. ரஜினிகாந்தின் நடிப்பில் இறுதியாகச் சிவா என்ற படத்திற்கு ஏ தரச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், 36 ஆண்டுகளுக்கு பின் இந்த கூலி படத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் ரத்தம் தெறிக்க வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், படம் வெளியான பிறகு இப்படத்தில் அந்த அளவிற்கு வன்முறை காட்சிகள் இல்லாத நிலையில், படத்திற்கு ஏன் “ஏ” தரச் சான்றிதழ் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இதையும் படிங்க : மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் – சுந்தர் சி கூட்டணி? வைரலாகும் தகவல்
இதனால் 18 வயதிற்கு மேல் உள்ள நபர்கள் மட்டுமே திரையரங்குகளில் கூலி படம் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் தரச் சான்றிதழை யு/ ஏ வாக மாற்றவேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேலை இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழை சென்சார் குழு கொடுத்தால், திரையரங்குகளுக்கு 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.