நிவின் பாலி நடித்துள்ள பார்மா வெப் சீரிஸை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட்

Actor Nivin Pauly: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் மலையாளத்தில் மட்டும் இன்றி தற்போது தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது இணையதள தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.

நிவின் பாலி நடித்துள்ள பார்மா வெப் சீரிஸை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட்

பார்மா வெப் சீரிஸ்

Published: 

20 Aug 2025 18:45 PM

மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் நிவின் பாலி. அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் பலப் படங்களில் நாயகனாக நடித்து அசத்தியுள்ளார். அதன்படி நடிகர் நிவின் பாலி (Actor Nivin Pauly) நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான தி மெட்ரோ, செவன்ஸ், தட்டத்தின் மரையது, புதிய தீரங்கள், சேப்டர்ஸ், டா தடியா, நேரம், 5 சுந்தரிகள், 1983, ஓம் சாந்தி ஓஷானா, பேங்களூர் டேய்ஸ், ஒரு வடக்கன் செல்ஃபி, பிரேமம், ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ, ஆனந்தம், சகாவு, ஹே ஜூட், லவ் ஆக்‌ஷன் ட்ராமா, காயம்குழம் கொச்சுன்னி, மைக்கேல், மூத்தோன், கனகம் காமினி கலகம், படவேட்டு, சாட்டர்டே நைட்ஸ், வருஷங்களுக்கு ஷேஷம் என பலப் படங்களில் நடித்துள்ளார். இதில் குறிப்பாக நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் நிவின் பாலி.

பிரேமம் படத்திற்கு பிறகு நடிகர் நிவின் பாலிக்கு தமிழகத்தில் ரசிகர்கள் அதிகரித்ததால் அவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படங்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி தற்போது தமிழில் படங்களில் தொடர்ந்து நடிக்க கமிட்டாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிவின் பாலியின் அறிமுக வெப் சீரிஸான பார்மா எந்த ஓடிடியில் வெளியாகிறது?

தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வரும் நிவின் பாலி தற்போது இணையதள தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இது நடிகர் நிவின் பாலி நடிக்கும் முதல் இணையதள தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகர்கள் ரஜித் கபூர், நரேன், ஸ்ருதி ராமச்சந்திரன், வீணா நந்தகுமார், முத்துமணி, நிகில் ராமச்சந்திரன் என பலர் இதில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பி.ஆர்.அருண் எழுதி இயக்கி உள்ள இந்த வெப் சீரிஸின் பெயர் பார்மா. மருத்துவ துறையை மையமாக வைத்து இந்த வெப் சீரிஸ் இருக்கும் என்பது போஸ்டரைப் பார்க்கும் போதே தெரிகிறது. மேலும் இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நடிகர் கார்த்தி மீது எனக்கு அப்போ மரியாதை வந்தது… தனுஷ் சொன்ன சம்பவம்!

பார்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?