பிரபாஸ் மட்டுமின்றி கண்ணப்பா படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த மற்றொரு நடிகர் யார் தெரியுமா?

Kannappa Movie: நடிகர் விஷ்ணு மஞ்சு இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் கண்ணப்பா. மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இரண்டு முக்கிய நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபாஸ் மட்டுமின்றி கண்ணப்பா படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த மற்றொரு நடிகர் யார் தெரியுமா?

கண்ணப்பா

Updated On: 

28 Jun 2025 13:04 PM

 IST

நடிகர் விஷ்ணு மஞ்சு (Actor Vishnu Manju) நடிப்பில் நேற்று 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கண்ணப்பா. இந்தப் படத்தை இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக ரசிகர்களிடையே மிகவும் பிரபமான மகாபாரதம் என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு உடன் இணைந்து நடிகர்கள், மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகுபாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேகா வாணி, கௌஷ் முகுந்தன், கௌஷ் முகுந்தன், கௌஷ் முகுந்தன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணப்பா படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடித்த நடிகர்கள்:

நடிகர் மோகன் பாபு 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்த இந்த கண்ணப்பா படத்தில் இரண்டு முக்கிய நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் இந்தப் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது நடிகர் பிரபாஸ் மட்டும் இன்றி மற்றொரு  முன்னணி நடிகரும் படத்தில் சம்பளம் பெறாமல் நடித்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி மோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மோகன் லால் இந்தப் படத்தில் சம்பளம் பெறாமல் நடித்துள்ளார். இவர் ஒரு நாள் மட்டுமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணியில் பங்கேற்றதாகவும் சம்பளம் பெறவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

கண்ணப்பா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

கண்ணப்பா படத்தின் கதை என்ன?

நடிகர் சரத்குமாரின் மகனாக இருக்கும் நடிகர் விஷ்ணு மஞ்சு சிறுவயதில் இருக்கும் போது அவரது நண்பரை கடவுளுக்காக பலி கொடுக்கிறார்கள். இதனால் கோபமான விஷ்ணு மஞ்சு கடவுள் இல்லை என்றும் இனி கடவுளை நம்பமாட்டேன் என்று சிறுவயதிலேயே முடிவு செய்கிறார். அதனைத் தொடர்ந்து இளைஞராக மாறும் விஷ்ணு மஞ்சு காதலில் விழுந்ததால் அவரை ஊரைவிட்டே சரத்குமார் தள்ளி வைக்கிறார்.

இப்படியான் சூழலில் விஷ்ணு மஞ்சுவின் ஊரில் உள்ள வாயு லிங்கத்தை அடைய எதிரிகள் குழு முயற்சி செய்கிறது. இதில் விஷ்ணு மஞ்சுவின் தந்தையான சரத்குமார் உயிரிழக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது தந்தையை கொலை செய்தவர்களை பழி வாங்க விஷ்ணு மஞ்சு முடிவு செய்கிறார். இந்த முயற்சியில் விஷ்ணு மஞ்சு வெற்றிப்பெற்றாரா? அவர் சிவன் பக்தர் ஆனாரா என்பதே படத்தின் கதை.

Related Stories
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது
கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!