Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விடாமுயற்சி படத்தின் தோல்வி குறித்து பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி – வைரலாகும் வீடியோ

Director Magizh Thirumeni: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான தடையற தாக்க படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரீ ரிலீஸில் கலந்துகொண்ட இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

விடாமுயற்சி படத்தின் தோல்வி குறித்து பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி – வைரலாகும் வீடியோ
இயக்குநர் மகிழ் திருமேனிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 Jun 2025 12:47 PM

இயக்குநர் மகிழ் திருமேனி (Director Magizh Thirumeni) இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தடையர தாக்க. இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்க நடிகை மம்தா மோகன்தாஸ் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து படத்தை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்தனர். இந்தப் நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய் உடன் இயக்குநர் மகிழ் திருமேனியும் கலந்துகொண்டார். அப்போது தடையர தாக்க படம் குறித்தும், சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் குறித்தும் மகிழ் திருமேனி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பேசியது:

தடையர தாக்க ரீ ரிலீஸில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படம் வெளியான போது திரையரங்குகளில் படத்தைப் பார்த்தவர்கள் விட ஆன்லைனில் படத்தைப் பார்த்தவர்களின் என்னிக்கைதான் அதிகம் என்று கூறினார். மேலும் தடையர தாக்க படம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் போது ரசிகர்கள் இதனை வரவேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒரு விடாமுயற்சி படமும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய படமாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குநர் மகிழ் திருமேனி படத்தை வரவேற்பதும் வரவேற்காததும் ரசிகர்களின் விருப்பம். அதே போல ஒரு படம் நல்ல படமா இல்லையா என்பதை தீர்மானிப்பது காலத்தின் கையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கவனம் பெறும் இயக்குநர் மகிழ் திருமேனி பேசிய வீடியோ:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து வெளியான படம் விடாமுயற்சி. இந்தப் படம் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அஜித் குமாரின் மாஸ் காட்சிகளை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படம் திருப்தி அளிக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.