Tere Ishq Mein: வித்தியாசமான காதல் கதை.. தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Tere Ishq Mein Movie OTT Release: தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நாயகர்களில் ஒருவர் தனுஷ். இவரின் நடிப்பில் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியான படம்தான் தேரே இஷ்க் மே. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்களைக் கடந்த நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேரே இஷ்க் மே திரைப்படம்
நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக கடந்த 2025 நவம்பர் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியான படம் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்தி மொழியை மையமாக கொண்டு வெளியாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தய் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்க, எல்லோ கலர் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை க்ரிதி சனோன்(Kriti Sanon) நடித்திருந்தார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் எமோஷனல் நிறைந்த காதல் கதைக்களத்தில் அமைந்திருந்தது. இதில் தனுஷ் விமானப்படை அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார்.
வெறும் ரூ 65 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருந்தது. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் கடந்த நிலையில், எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெட்பிளிக்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
தேரே இஷ்க் மே திரைப்படத்தை எப்போது நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்:
பொதுவாக திரையரங்குகள் திரைப்படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரத்திற்குள் ஓடிடியில் வெளியாகுவது வழக்கமே. அந்த வகையில் இவரின் தனுஷின் இந்த தேரே இஷ்க் மே படமானது கடந்த 2025ம் ஆனது இறுதியில் வெளியான நிலையில் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர்.
இதையும் படிங்க: டொவினோ தாமஸின் நடிப்பில் இந்த தல்லுமாலா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி தனுஷ் மற்றும் க்ரிதி சனோனின் தேரே இஷ்க் மே படமானது நாளை 2026 ஜனவரி 23ம் தேதியில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேரே இஷ்க் மே ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு பதிவு :
Aa raha hai woh ishk jo dil jod bhi de, aur tod bhi de ❤️🔥
Watch Tere Ishk Mein, out tomorrow on Netflix.#TereIshqMeinOnNetflix pic.twitter.com/ruqZC7289R— Netflix India South (@Netflix_INSouth) January 22, 2026
தனுஷின் இப்படமானது உலகளாவிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தமிழ் மக்களிடையே பெரிதும் சேரவில்லை. இப்படத்தின் ரிசளி போது இந்த படம் வெளியானது கூட பலருக்கும் தெரியாது. அந்த விதத்தில் ஓடிடியில் வெளியான பின் இந்த படத்திற்கு தமிழிலும் சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.