ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு மாஸ் நடிகருடன் இணையும் நெல்சன் திலீப்குமார்.. அட இந்த ஹீரோவா?

Nelson Dilipkumars Next Movie: கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் நெல்சன் திலீப்குமார். இவரின் இயக்கத்தில் குறைவான படங்கள் வெளியானாலும், ஒவ்வொன்றும் தரமாகவே இருக்கும். அந்த வகையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை இவர் இயக்கிவரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு நடிகரின் படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகிவருகிறது.

ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு மாஸ் நடிகருடன் இணையும் நெல்சன் திலீப்குமார்.. அட இந்த ஹீரோவா?

நெல்சன் திலீப்குமாரின் புதிய படம்

Published: 

26 Oct 2025 15:42 PM

 IST

தமிழில் நயன்தாராவின் (Nayanthara) நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” (Kolamavu Kokila) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்குநராக அறிமுகமானார். இவருக்கு இந்த முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் (Doctor) என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம்பிடித்தார். மேலும் தளபதி விஜயின் (Thalapathy Vijay) பீஸ்ட் (Beast), ரஜினிகாந்தின் (Rajinikanth) ஜெயிலர் (Jailer) என பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்களை இயக்கினார். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ஜெயிலர் 2 படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்துவருகிறார்.

இது அவரின் 172வது படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் தெலுங்கு முன்னணி நட்சத்திரத்தின் திரைப்படத்த இயக்குவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த தெலுங்கு பிரபலம் வேறு யாராயுமில்லை, நடிகர் ராம் சரண்தான் (Ram Charan).

இதையும் படிங்க: பார்வையாளர்களுக்கு எப்போதும் ட்ரெய்லரில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பேன் – விஷ்ணு விஷால்

தெலுங்கு முன்னணி நடிகருடன் இணையும் நெல்சன் திலீப்குமார்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தமிழில் தளபதி விஜய், ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தற்போது இவரின் புகழ் தெலுங்கு சினிமாவிலும் பரவத்தொடங்கியுள்ளது. அதன்படி சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் 2 படத்தை முடித்த கையோடு தெலுங்கு மொழியில் நடிகர் ராம் சாணை வைத்து புதிய படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க – பா.ரஞ்சித்

இந்த புதிய படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு

தெலுங்கில் ஆர்வம் காட்டும் தமிழ் இயக்குநர்கள் :

தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்த தமிழ் இயக்குநர்கள், தற்போது தெலுங்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்க ஆர்வம் கட்டிவருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் பவன் கல்யாணி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் மேலும் நெல்சன் திலீப்குமாரும், தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.