பல தடைகளையும் தாண்டி தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தை செய்த நாஞ்சில் விஜயன் – வைரலாகும் வீடியோ!

Nanjil Vijayan Life Update: தமிழில் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் நாஞ்சில் விஜயன். இவர் சமீபகாலமாக பல்வேறு விமர்சனங்களில் பேசப்பட்டிருந்தார். அந்த வகையில் இவர் வாழ்க்கையிலே தற்போது முன்னேற்றத்திற்கான விஷயம் ஒன்றை செய்ததாக, அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல தடைகளையும் தாண்டி தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தை செய்த நாஞ்சில் விஜயன் - வைரலாகும் வீடியோ!

நாஞ்சில் விஜயன் மற்றும் அவரின் மனைவி

Updated On: 

14 Feb 2026 19:52 PM

 IST

சின்னத்திரை தொலைக்காட்சியின் (TV) மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன் (Nanjil Vijayan). இவர் பிரபல நடிகராகவும், விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் (Reality shows) பங்குபெற்றுவருகிறார். இவர் தமிழில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்துவந்து. திருநங்கை ஓருவர், தன்னை நாஜில் விஜயன் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்திருந்தார். அதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பில் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் தன்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியதாகவும் அந்த திருநங்கை தெரிவித்திருந்தார். இது குறித்த விஷயமான மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.

தற்போது இந்த பிரச்சனையானது முழுமையாக முடிவிற்கு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நாஞ்சில் விஜயன், தனது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்திற்கான பாதையை தொடங்கியுள்ளது தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கோச்சடையான் வெளியான பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த்

போராட்டங்களுக்கு பின் நாஞ்சில் விஜயன் செய்த விஷயம் :

அந்த வீடியோவில் நாஞ்சில் விஜயன் மற்றும் அவரின் மனைவி மரியா இருவரும் பகிர்ந்துள்ளார். என்னவென்றால், அவர்களின் பல ஆண்டுகள் கனவு, தற்போது நிறைவேறியதாக தெரிவித்துள்ளனர். இந்த தம்பதி தற்போது தங்களுக்கென புதிய இடம் ஒன்றை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு பின் தொடர்ந்து வாடகை வீட்டில் வசித்துவந்த நிலையில், தற்போது சொந்தமாக புதிய இடத்தை வாங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சசிகுமாரை காப்பாற்றுவார்கள்… என்னைக் காப்பாற்ற வரமாட்டார்கள் – வெளிப்படையாக பேசிய எச்.வினோத்!

விரைவில் இந்த இடத்தில் வீடு கட்டி, குடியேறப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவர்களுடன், மறைந்த ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும் இணைந்து கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இவர்களின் முயற்சிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

நாஞ்சில் விஜயன் மற்றும் மரியா தம்பதி வெளியிட்ட வீடியோ பதிவு :

நாஞ்சில் விஜயன் மற்றும் மரியா இருவரும் கடந்த 2023ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பல தடைகள் மற்றும் பிரச்சனைகளை கடந்தும் இந்த தம்பதியினர் தற்போதும் இணைந்து வாழ்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நாஞ்சில் விஜயன், தான் புதியதாக இடம் வாங்கியுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துகளைப் பெற்றுவருகிறார்.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்