The Paradise: நானி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ‘தி பாரடைஸ்’ படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
The Paradise Movie 2nd single: டோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் நானி. இவரின் நடிப்பில், தெலுங்கில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் தி பாரடைஸ். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பைக் கொடுத்திருந்த நிலையில், தற்போது 2வது பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தி பாரடைஸ் மூவி
தெலுங்கு மொழியில் திரைப்படங்களில் நடித்து, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்தான் நேச்சுரல் ஸ்டார் நானி (Nani). இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் இறுதியாக ஹிட் 3 (HIT 3) என்ற படமானது வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நானியின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்க, ஸ்ரீ லக்ஷிமி வெங்கடேஷ்ட்வாரா சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துவருகிறது. இதில் நானிக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துவரும் நிலையில், தற்போது நானிக்கு ஜோடியாக தி பாரடைஸ் படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துவரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் “ஆயா ஷெர்” என்ற பாடல் வெளியானது. இது சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகவும் என்பது குறித்த தகவல்கள் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: காஜல் அகர்வாலின் தி இந்தியன் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
தி பாரடைஸ் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது:
தி பாரடைஸ் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், இப்படத்தின் 2வது பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள், வரும் 2026ம் ஆண்டு மே 10ம் தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபல மலையாள நடிகரின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளாரா அஜித் குமார்? வைரலாகும் தகவல்
நானியின் தி பாரடைஸ் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்து வைரலாகும் பதிவு:
#TheParadise – Second Song – 10th May pic.twitter.com/nzKYtEKy91
— Movie Tamil (@_MovieTamil) April 28, 2026
நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தில், அவருடன் கயாடு லோஹர், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, ராகவ் ஜுயல் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் அமைத்துள்ளது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2026 ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியிடப்படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படமானது ஆரம்பத்தில், 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்த நிலையில், படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அந்த வகையில் 2026 ஆகஸ்ட் 21ம் தேதியில் கட்டாயம் வெளியாகும் என கூறப்படுகிறது.