துல்கர் சல்மானின் 41-வது படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்

GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களை கொடுத்த இசைய்மைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது நாயகனாகவும் பலப் படங்களில் நடித்துள்ளார். நாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இவர் படங்களுக்கு இசையமைக்கும் பணியை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மானின் 41-வது படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்

ஜி.வி. பிரகாஷ் குமார்

Published: 

10 Sep 2025 18:03 PM

 IST

தமிழ் சினிமாவில் 2006-ம் ஆண்டு வெளியான வெயில் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் சிறு வயதில் இருக்கும் போதே இவரது தாய் மாமாவான ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களைப் பாடினார் என்பது பலரும் அறிந்த விசயமே. அப்படி இருக்கும் சூழலில் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தனது இசையால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப் போட்டார். அதனைத் தொடர்ந்து இவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இசையமைபாளராக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் மட்டு இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து இசையமைப்பாளராக கொடிக்கட்டிப் பறக்கும் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாகவும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். நாயகனாக ஆனப் பிறகு இசையமைக்கும் பணியை விடாமல் தொடர்ந்து இசையமைத்தும் வருகிறார். தனது படங்களுக்கு மட்டும் இன்றி மற்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இவரது இசையில் அடுத்ததாக நடிகர் தனுஷின் இட்லி கடைப் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 14-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்:

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் உருவாகி பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் லக்கி பாஸ்கர். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் அவரது 41-வது படத்திற்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… Keerthy Suresh: அந்த காட்சியை பார்த்ததும் புல்லரித்துவிட்டது.. கீர்த்தி சுரேஷ் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆடியோ லஞ்ச் தேதியை லாக் செய்த இட்லி கடை படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!