நான் பிறந்ததில் இருந்தே தொடங்கியது இந்த யுத்தம் – அடுத்த முடிச்சை அவிழ்க்க வருகிறது த்ரிஷம் 3!

Drishyam 3 Movie Official Teaser | மலையாள சினிமாவில் மட்டும் இன்றி ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் த்ரிஷ்யம். இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாகத்திற்கான டீசரை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

நான் பிறந்ததில் இருந்தே தொடங்கியது இந்த யுத்தம் - அடுத்த முடிச்சை அவிழ்க்க வருகிறது த்ரிஷம் 3!

த்ரிஷம் 3

Published: 

29 Apr 2026 17:51 PM

 IST

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்று வருகின்றது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் த்ரிஷம். இயக்குநர் ஜீத்து ஜோசஃப் எழுதி இயக்கிய இந்தப் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இரண்டாம் பாகும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து 3-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

அதன்படி இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்துள்ள படம் த்ரிஷ்யம் 3. இந்தப் படத்தில் நடிகர்கள் மீனா, சித்திக், ஆஷா சரத், முரளி கோபி, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தை ஆஷிர்வாத் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். இந்த நிலையி படம் வருகின்ற 21-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்த முடிச்சை அவிழ்க்க வருகிறது த்ரிஷம் 3:

இந்தப் படத்தில் மோகன்லால் பிறந்ததில் இருந்தே எந்த சொந்தமும் இல்லாத அனாதையாக வளர்கிறார். இப்படி இருக்கும் மோகன்லால் தான் வேலை செய்த ஓனரின் மகள் மீனாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றது. இதில் மூத்த மகள் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த போது சுற்றுழா சென்ற இடத்தில் மற்றொரு மாணவன் அவரை தவறாக வீடியோ எடுத்து மிரட்டுகிறான்.

வீடு வரைக்கு வந்து மிரட்டிய அவனை மீனாவும் மகளும் எதிர்பாரதவிதமாக கொலை செய்து விடுகிறார்கள். அதனை மோகன்லால் மறைத்துவிடுகிறார். அதன் பிறகு அந்த பையன் காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் ஆஷாவின் மகன் என்பது தெரிகிறது. அந்த பையனைக் காணவில்லை என்பதால் மோகன்லாலின் குடும்பதையை சித்ரவதை செய்கின்றனர். ஆனால் சரியான ஆதாரம் இல்லாததால் மோகன்லாலின் குடும்பமும் தப்பிங்கின்றன.

இந்த நிலையில் அவர்களின் குடும்பம் நிம்மதியா இருக்கும் அதே நேரத்தில் காவல்துறையினர் தொடர்ந்து அவர்களின் மீது தங்களது கவனத்தை வைத்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக மூன்றாவது பாகத்துடன் இந்த தொடர் கதைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… தேர்வு உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்போது, ​​தேர்வை யார் தீர்மானிக்கிறார்கள்? அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது எக்ஸாம் இணையதள தொடர்!

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 4 ஆண்டுகளைக் கடந்தது பிரித்விராஜ் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜன கண மன படம்!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..