8 ஆண்டுகளைக் கடந்தது நானி – சாய் பல்லவி நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் அப்பாயி படம்
8 Years Of Middle Class Abbayi Movie: நடிகர் நானி நாயகனாகவும் நடிகை சாய் பல்லவி நாயகியாகவும் நடித்து தெலுங்கு சினிமாவில் வெளியான படம் மிடில் கிளாஸ் அப்பாயி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 8 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது.

மிடில் கிளாஸ் அப்பாயி படம்
தெலுங்கு சினிமாவில் கடந்த 21-ம் தேதி டிசம்பர் மாதம் 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மிடில் கிளாஸ் அப்பாயி. ஆக்ஷன் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் வேணு ஸ்ரீராம் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விஜய் வர்மா, பூமிகா சாவ்லா, ராஜீவ் கனகலா, நரேஷ், ஆமணி, பிரியதர்ஷி புலிகொண்டா, போசானி கிருஷ்ண முரளி, பவித்ரா லோகேஷ், வெண்ணிலா கிஷோர், மகாதேவன்,
ராசா ரவி, அஷ்ரிதா வேமுகந்தி, சுபலேகா சுதாகர், ராகேஷ் வர்ரே, ரூபா லட்சுமி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த மிடில் கிளாஸ் அப்பாயி படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். அதன்படி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படக்குழு அதனை கொண்டாடி வருகின்றது.
8 ஆண்டுகளைக் கடந்தது நானியின் மிடில் கிளாஸ் அப்பாயி படம்:
அம்மா -அப்பா இல்லாமல் தனது அண்ணனுடன் வளர்ந்து வந்தவர் நானி. இதன் காரணமாக பெரிய அளவில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் நானி அவரது அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகு அண்ணியின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாமல் தனது சொந்தகாரர் வீட்டுக்கு செல்கிறார். ஆர்டிஓ அதிகாரியாக இருக்கும் நானியின் அண்ணிக்கு வேறு இடத்திற்கு பணிமாற்றம் நடைப்பெற்றதால் அவர் அந்த ஊரில் தங்கவைத்து பார்த்துக்கொள்ள நானியிடம் உதவி கேட்கிறார் அவரது அண்ணன்.
பிறகு அண்ணியுடன் அந்த ஊருக்கு செல்லும் நானி அங்கையும் அண்ணியின் செயல்களில் எரிச்சலாகவே சுற்றுகிறார். இப்படி இருக்கும் சூழலில் கல்லூரியில் படிக்கும் சாய் பல்லவி மீது அவருக்கு காதல் ஏற்படுகிறது. பிறகுதான் சாய் பல்லவி தனது அண்ணியின் தங்கை என்று தெரிகிறது. இப்படி இருக்கும் சூழலில் இவர்களின் காதல் சேர்ந்ததா இல்லையா என்பதும் அண்ணியின் கண்ண்டிப்பு தனது நல்லதுக்குதான் என்று நானி புரிந்துகொண்டாரா என்பதே படத்தில் கதை.
Also Read… 2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
மிடில் க்ளாஸ் அப்பாயி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
8 Years of Timeless Entertainer #MCA
A film rooted in family emotions
and powered by strong storytelling.Natural Star @NameisNani & #SriramVenu
delivered a blockbuster that continues to live in our hearts.@Sai_Pallavi92 @ThisIsDSP @bhumikachawlat@SVC_official pic.twitter.com/RsnySSkxPQ— Sri Venkateswara Creations (@SVC_official) December 21, 2025
Also Read… 2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?