பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் நடிகை இவரா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!
Pradeep Ranganathan 5th Film: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கிவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது.அந்த வகையில் இவரின் 5வது படத்தை அவரே இயக்கி, நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல்கள் வைரலாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதனின் புது படம்
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டியூட் (Dude). இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthishwaran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்திருந்தார். இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் இன்னும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) என்ற படமானது வெளியாகாமல் உள்ளது. இதை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில், இது பிரதீப் ரங்கநாதனின் 2வது படமாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் தனது 5வது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் அவர் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த புது படத்தை டிராகன், லவ் டுடே போன்ற படங்ககளை தயாரித்த ஏ.ஜி.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 2026-ம் தமிழ் சினிமாவில் வரிசைக்கட்டும் நடிகை மமிதா பைஜுவின் படங்கள் – லிஸ்ட் இதோ
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை:
அந்த வகையில் இந்த புது படத்திற்கு கதாநாயகியாக யார் நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், இணையத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது. அது என்னெவென்றால் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியை (Meenakshi Chaudhary) நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.
பிரதீப் ரங்கநாதனின் புது படம் குறித்து வைரலாகும் பதிவு :
— #PradeepRanganathan is set to direct and act in his next film 🎬✨
— This movie is being produced by #AGSEntertainment 🏢🎥
— The film is planned as a science-fiction movie 🔬🚀
— #MeenakshiChaudhary is expected to play the female lead in this project 🌟🎭
—… pic.twitter.com/gTCKELXT09— Movie Tamil (@_MovieTamil) December 21, 2025
ஹாட்ரிக் வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன் :
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இதுவரை 3 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் முதல் படத்தை அவரே இயக்கி நடித்திருந்த நிலையில், ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று சூப்பர் த வெற்றியை பெற்றிருந்தது. இந்த படமானது ஒட்டுமொத்தமாக ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. 2வது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன். இந்த படமானது கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
இந்த படமும் வெளியாகி ரூ 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. அதை அடுத்ததாக இந்த 2025ம் ஆண்டில் வெளியான 2வது படம்தான் டியூட். இப்படத்தின் ரிலீஸின்போது விமர்சனங்கள் வெளியாகியிருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிப்படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது