Mari Selvaraj: ரஜினிகாந்த் சாருடன் படம்… ஆனால் அவர் என்னை நம்பணும்- மாரி செல்வராஜ் சொன்ன விஷயம்!
Mari Selvaraj About Rajinikanth: தமிழில் மாறுபட்ட கதைக்களத்தில் படங்களை உருவாக்கி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்தான் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் பைசன் படமானது விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தை இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு மாரி செவ்ராஜ் சொன்ன பதில் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் மாரி செல்வராஜ்
கடந்த 2018ம் ஆண்டில் வெளியான “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான இயக்குநர்தான் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இந்த ஒரே படத்தின் மூலம் பல்வேறு விருதுகளை வென்று, மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தை அடுத்ததாக தனது 2வது திரைப்படத்தில் தனுஷை (Dhanush) வைத்து இயக்கியிருந்தார். இந்த படம்தான் கர்ணன் (Karnan). இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, மாமன்னன் மற்றும் வாழை என மொத்தமாக 4 திரைப்படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் 5வதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் பைசன் (Bison). இந்த திரைப்படத்தில் மாரி செல்வராஜ் இயக்க, துருவ் விக்ரம் (Dhruv Vikram) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால், ரஜீஸா விஜயன், கபடி வீரர் பிரபஞ்சன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த திரைப்படமானது கபடி கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், நாளை 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், ரஜினிகாந்துடன் (Rajinikanth) படம் இயக்குவது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் கென் கருணாஸ் – வைரலாகும் அறிவிப்பு வீடியோ
ரஜினிகாந்துடன் படம் இயக்குவது குறித்து மாரிசெல்வராஜ் பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் மாரி செல்வராஜிடம், ரஜினிகாந்திற்காக படத்திற்கு கதை வைத்திருக்கீர்களா ? என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். அதில் மாரி செல்வராஜ், “நான் நிறைய தடவை ரஜினிகாந்த் சார் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அவருடன் நிறைய படங்களின் கதையை பற்றியும் பேசியிருக்கிறேன். மேலும் ரஜினிகாந்த் சார் எனது எல்லா படங்களும் வெளியானாலும் என்னை நேரில் அழைத்து பாராட்டுவார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களுக்கு என்னை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் வாழை படத்திற்காக ஒரு பெரிய கடிதமே எழுதி எனக்கு அனுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: திரையரங்குகளில் வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
ரஜினிகாந்த் சார் மாதிரி ஒரு ஹீரோ கிடைத்தால், நான் எப்படி வேலை செய்வேன் என்று அவருக்கு சந்தேகம் இருக்கலாம். ஒரு படத்திற்கான பணிகள் நடந்துவருகிறது, நானும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் அது அப்படியே இருக்கிறது. அவருக்கான கதைகள் இல்லாமல் எப்படி இருக்கும், கதை என்பது ஒருவருக்காக இருக்காது. என்னிடம் கதை இருக்கிறது, ரஜினிகாந்த் சார் வந்தாலும் அந்த கதையை வைத்து படம் இயக்கலாம் அல்லது துருவ் விக்ரம் வந்தாலும் அந்த கதையை பண்ணலாம்.
ஆனால் ரஜினிகாந்த் சார் வந்தாலே அந்த கதையை நான் கொஞ்சம் பிரம்மாண்டமாக தயாராகவேண்டும், நான் விருப்பப்படுவது ஒன்றே ஒன்றுதான் என்னை நம்பனும். அது சின்ன ஹீரோவாக இருந்தாலும் சரி, பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி எனது கதையை நம்பினார்கள் என்றால் நான் தீவிரமாக வேலை செய்ய தயார்” என மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
பைசன் திரைப்படம் பற்றி மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு :
Life, Love, Violence, Survival and Kabaddi! #BisonKaalamaadan 🦬
Final Raid From Tomorrow!!🔥#BisonKaalamaadanFromDiwali #BisonKaalamaadanOnOct17 🎆@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector… pic.twitter.com/e96hxw0p7l
— Mari Selvaraj (@mari_selvaraj) October 16, 2025
இந்த பைசன் படமானது முழுக்க கபடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படமானது துருவ் விக்ரம் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.