29 படத்திலிருந்து மேன்சன் குத்து பாடலை வெளியிட்ட அனிருத் ரவிச்சந்தர்

Mansion Kuthu Lyric Video From 29 Movie Out Now: தமிழ் சினிமாவில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 29. இந்தப் படத்தில் இருந்து மேன்சன் குத்து என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

29 படத்திலிருந்து மேன்சன் குத்து பாடலை வெளியிட்ட அனிருத் ரவிச்சந்தர்

மேன்சன் குத்து

Published: 

01 Apr 2026 18:31 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மேயாத மான். நடிகர் வைபவ் நாயகனாகவும் நடிகை பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குநர் ரத்ன குமார் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயகுநர் ரத்னகுமார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து ரத்னகுமாருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் ஆடை. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து இருந்தார்.

வித்யாசமான கதை அம்சத்தில் வெளியான இந்தப் படமும் மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பி குலு குலு என்ற படத்தை இயக்குநர் ரத்னகுமார் இயக்கி இருந்தார். படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் கொட்டிக் கிடந்தது. காமெடிக்கு பெயர்போன நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் சிரிக்காமலே நடித்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

29 படத்திலிருந்து மேன்சன் குத்து பாடலை வெளியிட்ட அனிருத்:

இதனைத் தொடர்ந்து தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் 5-வதாக உருவாகி வரும் படம் 29. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர்கள் விது மற்றும் பிரீத்தி அஸ்ரானி இருவரும் நாயகன் நாயகியாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் சான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் இருந்து மேன்சன் குத்து என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இன்வெஸ்டிகேஷன் க்ரைம் வெப் ஸ்டோரி பார்க்கணுமா? கேரள க்ரைம் ஃபைல்ஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி எந்த நடிகை தெரியுமா? தமிழில் முதல் படத்திலே STR-க்கு ஜோடி!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..