மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவிற்கு எண்டே இல்லை… வைரலாகும் தகவல்
Mani Ratnam New Movie Music Director Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த பல வதந்திகள் பரவி வருகின்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம்
கன்னட சினிமாவில் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மணிரத்னம். கடந்த 1983-ம் ஆண்டு தனது இயக்குநர் பணியைத் தொடங்கிய மணிரத்னம் அடுத்தடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்களை இயக்கத் தொடங்கினார். இவரது இயக்கத்தி வெளியாகும் படங்கள் அனைத்தும் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய மொழிகளில் உள்ள நடிகர்கள் பலர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதை தங்களது கனவாக வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 1990ம் ஆண்டிற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் அதிக அளவில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே படங்களை இயக்கி வந்தார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இவர் இயக்கும் படங்களுக்கு கடந்த 1992-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். அதன்படி இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இவர் தற்போது உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதன்படி சுமார் 34 ஆண்டுகளாக இவர்களின் கூட்டணி உள்ளது. இத்தனை ஆண்டுகளிலும் மணிரத்னம் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவிற்கு எண்டே இல்லை:
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியை வைத்து இயக்க உள்ள படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவிற்கு எண்டே இல்லை என்றும் இந்தப் படத்திற்கான இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாகவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றது. இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… Ken Karunaas: யூத் பட ட்ரெய்லரை பார்த்துட்டு தனுஷ் சார் சொன்னது இதுதான் – கென் கருணாஸ்!
இணையத்தில் வைரலாகி வரும் எக்ஸ் தள பதிவு:
#ManiRatnam’s next film will have music by #ARRahman..🔥✅ ARR has already started working on the project..⭐ No end to this Combo..❣️
• Starring #VijaySethupathi and #SaiPallavi..⭐ The shoot is expected to begin in July..👍 Currently, script work is in progress..✌️
• VJS… pic.twitter.com/FkO4yYqzNR
— Laxmi Kanth (@iammoviebuff007) March 18, 2026
Also Read… Happy Raj: அச்சா.. ஆக்டிங் பகுத்தாச்சா… வெளியானது ஜி.வி.பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்தின் ட்ரெய்லர்!