மனதை திருடிவிட்டாய் படத்தின் இயக்குநர் நாராயண மூர்த்தி மாரடைப்பால் காலமானார்
Director Narayana Murthy : தமிழ் சினிமாவில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு கூட்டணியை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடியப் படம் மனதை திருடிவிட்டாய். இந்தப் படத்தின் இயக்குநர் நாராயண மூர்த்தி தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நாராயண மூர்த்தி
கோலிவுட் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மனதை திருடிவிட்டாய். இந்தப் படத்தை இயக்குநர் நாராயண மூர்த்தி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் பிரபு தேவா (Prabhu Deva) நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் கௌசல்யா, காயத்ரி ஜெயராமன், வடிவேலு, திரு.வா, திருமதி வா, விவேக், ரஞ்சித், ஸ்ரீமன், சாந்தி வில்லியம்ஸ், ஷரோன், பாத்திமா பாபு, ராஜீவ், பாண்டு, காக்கா ராதாகிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், மதன் பாப், பி. சுசீலா, சிவா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஆர்.ஜி மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் கே. ஆர். கங்காதரன் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஓவியாவிற்கு பிறகு ரசிகர்களிடையே அதிகம் பிரபலமான பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?
மாரடைப்பால் காலமானார் இயக்குநர் நாராயண மூர்த்தி:
இயக்குநர் நாராயண மூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த மனதை திருடிவிட்டாய் படத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் காம்பே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிகர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் இவர்களின் காட்சி தற்போது வரை ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் நாராயண மூர்த்தி நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி