KH237 Movie: கமல்ஹாசன் படத்தில் இணைந்த மலையாள பிரபலம்.. அட இவரா?

Kamal Haasans KH237: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கமல் ஹாசன். இவரின் முன்னணி நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகிவரும் படம்தான் KH237 திரைப்படம். இப்படத்தில் மலையாள எழுத்தாளர் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

KH237 Movie: கமல்ஹாசன் படத்தில் இணைந்த மலையாள பிரபலம்.. அட இவரா?

அன்பரீவ் மற்றும் கமல்ஹாசன்

Published: 

13 Sep 2025 16:26 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருபவர் கமல் ஹாசன் (Kamal haasan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக தக் லைப் (Thug Life) என்ற திரைப்படமானது வெளியானது. இந்த படத்தின் கதையை கமல் ஹாசன் எழுதியிருந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியீட்டிற்கு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.  இந்நிலையில், இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் (Anbariv) இயக்கத்தில், இவர் நடிக்கவிருக்கும் படம்தான் KH237.  இந்நிலையில், இந்த படத்தில் மலையாள திரைக்கதை எழுத்தாளர் சியாம் புஷ்கரன் (Shyam Pushkaran). இது குறித்தான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ஐஸ்வர்யா லெக்ஷ்மி எடுத்த திடீர் முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்!

கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :

யார் இந்த சியாம் புஷ்கரன்?

மலையாள சினிமாவில் பிரபல திரைக்கதை எழுத்தாளராக இருந்து வருபவர் சியாம் புஷ்கரன். இவர் டி தடியா, 5 சுடர்கள், இடுக்கி கோல்ட், ராணி பத்மினி மற்றும் தங்கம் என பல்வேறு படங்களில் ஸ்க்ரீன்பிளே ரைட்டராக பணியாற்றியிருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து, தமிழில் இவர் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமாகியிருக்கும் படம்தான, KH237. இந்த படத்தை தமிழ் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் மாஸ்டர் இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க : தமிழில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சாய் பல்லவி – வைரலாகும் தகவல்

கமல்ஹாசனின் KH237 படம் :

நடிகர் கமல்ஹாசனின் 237வது திரைப்படத்தின் அறிவிப்புகள், கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியிலே வெளியானது. இந்த படத்தை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளார் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடனும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு பிறகுதான் இந்த KH237வது படத்தில் நடிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.