சூர்யா 47 படத்தில் சௌபின் நடிக்கிறாரா? வைரலாகும் போட்டோ
Soubin Shahir with Suriya photo goes viral | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சௌபின் ஷாகிர். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்று நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகர் சூர்யாவை சந்தித்த சௌபின் ஷாகிர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சௌபின் ஷாகிர். நடிப்பில் ஆரம்ப காலக்கட்டத்தி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் சௌபின் ஷாகிர். அதனைத் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். தொடர்ந்து நடிகர் சௌபின் ஷாகிர் நடிப்பில் வெளியான காமெடிகள் பல தற்போது வரை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து காமெடியனாக மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகர் சௌபின் ஷாகிர் நாயகனாக நடிக்கும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சௌபின் ஷாகிர். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க நடிகர் சௌபின் ஷாகிர் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
சூர்யா 47 படத்தில் சௌபின் நடிக்கிறாரா?
அதன்படி நடிகர் சௌபின் ஷாகிர் சமீபத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்து பேசினார். தனது மனைவியுடன் சூர்யாவை சந்தித்த சௌபின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமா இயக்குநர் ஜித்து மாதவனுடன் பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக சௌபின் ஷாகிர் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 16 ஆண்டுகளைக் கடந்தது ராகவா லாரன்சின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Malayalam Actor #SoubinShahir & His Wife #JamiaZaheer With #Suriya 😍❤️ pic.twitter.com/vOFhrq6rAs
— Saloon Kada Shanmugam (@saloon_kada) May 8, 2026