விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.. கண் எதிரே தந்தை உயிரிழப்பு!

Actor Shine Tom Chacko: பிரபல மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் இன்று காரில் சென்று கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது தாய்க்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.. கண் எதிரே தந்தை உயிரிழப்பு!

ஷைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் மரணம்

Updated On: 

06 Jun 2025 10:31 AM

 IST

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko) மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று 6-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை காலை கார் விபத்தில் சிக்கி உள்ளனர். இதில் சைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது தாயார் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விபத்து நடக்கும் வேலையில் நடிகர் சைன் தனது தந்தை, தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் ஆகியோருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது தாய் இருவரையும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது வெளியான தகவலின்படி இந்த கார் விபத்தில் சைன் டாம் சாக்கோவின் சகோதரர் மற்றும் கார் ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தர்மபுரியில் உள்ள பாலக்கோட்டை அருகே காலை 7 மணியளவில் சைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் வந்த கார் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நடந்தது என்று தெரிகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெரும் சைன் டாம் சாக்கோ:

விஜய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன சைன் டாம் சாக்கோ:

மலையாள சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார் சைன் டாம் சாக்கோ. இவர் மலையாள சினிமாவில் நாயகன், வில்லன், குணசித்திர நடிகர் என அனைத்து விதமான கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories