அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ் இருந்தது… ஆனால் அவர் என்ன தங்கச்சினு சொல்லிட்டாரு – பிரபல நடிகை ஓபன் டாக்
Actress Maheswari: கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே நடிகையாகவும் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் தங்கையாகவும் நன்கு அறியபப்ட்டவர் நடிகை மகேஸ்வரி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் குறித்து கலகலப்பாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை மகேஸ்வரி
கோலிவுட் சினிமாவில் கடந்த 1994-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கருத்தம்மா. இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை மகேஸ்வரி. படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகை மகேஸ்வரி. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மகேஸ்வரி நடிப்பில் வெளியான பாஞ்சாலங்குறிச்சி, நேசம், உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், ரத்தினம், என் உயிர் நீ தானே, மன்னவரு சின்னவரு, சுயம்வரம், அதே மனிதன் என தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு சினிமாவில் நடிகை மகேஸ்வரி அதிகப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருந்தாலும் இதில் இவர் நாயகி இல்லை. நாயகியின் தங்கையாகவே நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் குமார், சியான் விக்ரம், பிரபு மற்றும் பிரபு தேவா என பலருடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் பலப் படங்கள் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் மீது எனக்கு க்ரஸ் இருந்தது:
இந்த நிலையில் நடிகை மகேஸ்வரி சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் மீது அவருக்கு ஈர்ப்பு இருந்ததாக தெரிவித்துள்ளார். அதன்படி தொடர்ந்து இரண்டு படங்களில் அஜித் உடன் இணைந்து பணியாற்றியதால் அவருடன் நீண்ட நாட்கள் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அவர் மீது எனக்கு ஒரு மனிதராக நிறைய மரியாதை உள்ளது. ஆனால் கிட்டதட்ட ஒன்னறை ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் பயணித்தபோது அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அப்படி இருந்த சூழலில் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் அப்போ அஜித் என்ன கூப்பிட்டு மகி நீ எனக்கு தங்கச்சி மாதிரி. உன் வாழ்க்கையில எப்போ என்ன பிரச்னைனாலும் நீ என்ன எப்ப வேணும்னாலும் கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டார் என மிகவும் கல கலப்பாக நடிகை மகேஸ்வரி பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… என்னவளே அடி என்னவளே… 31 ஆண்டுகளை நிறைவு செய்த காதலன் படம்
நடிகை மகேஸ்வரியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… கிளாசிக் படத்தை ரீமேக் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் தான் நடிப்பேன் – நடிகர் கவின்