Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட சென்சார் வழக்கு – தீர்ப்பு எப்போது?
Jana Nayagan Final Verdict: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. இப்படத்தின் வழக்கு சென்னை உயர் நீதிம்னறத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் 2026 ஜனவரி 27ம் தேதி (செவ்வாய் கிழமை) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் ஜன நாயகன்
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக தயாராகியுள்ளது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கியிருந்த நிலையில், கே.வி.என்.ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்திருந்தது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இருந்து 4 பாடல்கள் இப்படத்திலிருந்து வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியிலே வெளியாகவேண்டியிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனையின் (Censor case) காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. இதன் சென்சார் வழக்கு கடந்த 2026 ஜனவரி 5ம் தேதி முதலே சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court_ நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 4 விசாரணைகளை கடந்துள்ளது. இந்த படத்தின் இறுதி விசாரணை கடந்த 2026 ஜனவரி 20ம் தேதியில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த விசாரணையில் படக்குழு மற்றும் சென்சார் குழு தரப்பில் இரு வாதங்கள் கேட்கப்பட்டிருந்த நிலையில், இறுதித் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு எப்போது நடக்கும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஜன நாயகன் படத்தின் இறுதித் தீர்ப்பு வரும் 2026 ஜனவரி 27ம் தேதியில் குடியரசு தினத்திற்கு அடுத்த நாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்றே கணித்தார் வெங்கட் பிரபு.. ‘விசில் போடு’ பாடல் வந்தது தற்செயலா? – வெங்கட் பிரபு கலகல பேச்சு!
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து வைரலாகும் பதிவு :
#JanaNayagan – Censor hearing judgment on Jan 27..✅ The film might go to the Revising Committee if either side wins..✌️
Hope this doesn’t go to the Supreme Court.. It will delay the film’s release even further..🚶If all goes well, it might hit the big screens by… pic.twitter.com/8M4lGVuwxj
— Laxmi Kanth (@iammoviebuff007) January 23, 2026
ஜன நாயகன் படத்தின் தீர்ப்பு கிடைத்தபின் என்ன நடக்கும் :
ஒருவேளை ஜன நாயகன் படமானது மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு, அதன்பின் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என தீர்ப்பு வந்தால், இப்படத்தின் மறு ஆய்விற்கு 2 முதல் 3 வாரங்கள் ஆகும். அதற்கு பிப்ரவரி மாதம் இறுதியாகிவிடும் நிலையில், 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் இப்படத்தின் ரிலீஸ் தடைபடும். இதனால் தேர்தலுக்கு பின்னரே ரிலீஸ் செய்யப்படும்.
இதையும் படிங்க: ரவி மோகனின் அரசியல் படம்.. கராத்தே பாபு படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
இந்த படத்தின் தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள் குறிப்பிடட நாட்கள் மட்டும் (10 முதல் 15 நாட்கள்) கொடுத்து மறு ஆய்வு செய்யவேண்டும் என தீர்ப்பு வழங்கினால் இந்த ஜன நாயகன் படம் 2026 ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அல்லது 23ம் தேதிக்குள் வெளியாகிவிடும். அவ்வாறு தீர்ப்பு வரவில்லை என்றால் நிச்சயமாக தேர்தலுக்கு பின்னரே ஜன நாயகன் படம் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. என்ன நடக்கிறது என்று வரும் 2026 ஜனவரி 27ம் தேதியில் நடக்கும் இறுதித் தீர்ப்பில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.