யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகு படக்குழு குடும்பங்களுடன் வந்து படத்தைப் பார்கமுடியாமல் ரசிகர்கள் தவிப்பதால் சில காரணங்களை மேற்கோள் காட்டி வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

Published: 

20 Aug 2025 19:32 PM

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்து. மேலும் படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக படத்தை தணிக்கை குழுவின் ஒப்புதழுக்காக படக்குழு அனுப்பியபோது கூலி படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுப்பதாக அறிவித்தது. இதனைப் அப்போது படக்குழு ஒத்துக்கொண்டு படத்தை திரையரங்குகளில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியான போது 18 வயதிற்கு மேலே உள்ளவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்படி ஒரு சூழலிலும் படம் வெளியான 4 நாட்களில் உலக அளவில் சுமார் ரூபாய் 404 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து படம் பார்த்த ரசிகர்களும் படத்திற்கு ஏ கொடுக்கும் அளவிற்கு அவ்வளவு வன்முறை காட்சிகள் இல்லை என்றும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்தால் குடும்பத்தினருடன் படத்திற்கு சென்று பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

கூலி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கோரி நீதிமன்றத்தை நாடிய படக்குழு:

இந்த நிலையில் நேற்று 19-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு கூலி படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூலி படத்திற்கு மறு தணிக்கை செய்து யு/ஏ சான்றிதழ் வழங்க கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், கூலி படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்த கேஜிஎஃப் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருந்ததை அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சன் நெட்வொர்க் சார்பாக ஆஜரான கூலி படத்திற்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால் படத்தை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியவில்லை என்று வாதிட்டார். சென்சார் போர்ட் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் படத்தில் சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதல் கொடுக்கப்படும் என்று தெரித்தபோது காட்சிகளை நீக்காமல் ஏ சான்றிதழைப் படக்குழு ஏற்றுக் கொண்டது.

தற்போது படம் வெளியாகி இத்தனை நாட்களுக்குப் பிறகு யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கை தொடர்ந்துள்ளது. இதற்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றும் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வருகின்ற 25-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டிற்குள் மனுவிற்கு பதிலளிக்க தணிக்கை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Also Read… மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் – சுந்தர் சி கூட்டணி? வைரலாகும் தகவல்

கூலி படக்குழு வெளியிட்டுள்ள சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya : சூர்யாவின் 47வது படத்தின் இசையமைப்பாளர் இவரா?.. அப்ப நிச்சயம் கொண்டாட்டம்தான்!