’டிஎன்ஏவில் நிரூபிக்கப்பட்டால் குழந்தையை கவனிப்பேன்’ – மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபர அறிக்கை!

Madhampatty Rangaraj: ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கில் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் குறித்தும் குழந்தை குறித்தும் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி நேற்று வைரலானது. இந்த நிலையில் தான் அப்படி கூறவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’டிஎன்ஏவில் நிரூபிக்கப்பட்டால் குழந்தையை கவனிப்பேன்’ - மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபர அறிக்கை!

மாதம்பட்டி ரங்கராஜ்

Published: 

05 Nov 2025 12:16 PM

 IST

தமிழ் நாடு மட்டும் இன்றி உலக அளவில் பிரபலமான சமையல் கலைஞராக வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் தமிழ் சினிமாவில் சிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.  மக்களிடையே பிரபலமான நபராக இருக்கும் இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைப்பெற்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஜாய் கிருசில்டா சமீபத்தில் வெளியிட்ட சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரலானது. அதில் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் தனக்கும் திருமணம் நடைப்பெற்றுவிட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிருசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மகளிர் ஆணையத்தையும் நாடி இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்த போதே ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஆண் குழந்தை தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டது குறித்தும் அந்த குழந்தை தன்னுடையது என்று கூறியதாகவும் செய்திகள் பரவியது. இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

டிஎன்ஏவில் நிரூபிக்கப்பட்டால் குழந்தையை கவனிப்பேன்:

மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளதாவது, மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல், ஆயிரம் விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ.1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அதில் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்து இருந்தார்.

Also Read… மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அல்லு அர்ஜுன் படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளரா? வைரலாகும் பதிவு

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை