இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Vijay Sethupathi And Sai Pallavi New Movie: இயக்குநர் மணிரத்னம் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கு பின் மீண்டும் இயக்குவதில் இறங்கியுள்ளார். இவர் இயக்கும் புது படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி லீட் வேடத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்போது இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் சேதுபதி, சாய் பல்லவி, மணிரத்னம்

Updated On: 

20 Mar 2026 12:52 PM

 IST

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்ப்பவர்தான் மணிரத்னம் (Mani Ratnam). இவரின் இயக்கத்தில் தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் திரிஷா போன்ற பிரபலங்கள் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்த படத்தை அடுத்தாக இயக்குநர் மணிரத்னம் வித்தியாசமான காதல் கதையை எழுதிவந்ததாக கூறப்பட்டிருந்தது.

இதில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) இணைந்து நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, மணிரத்னம் கூட்டணியில் நடிப்பதை உறுதி செய்திருந்தார். அந்த வகையில் இப்படம் எந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், யார் இசையமைக்கிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் நான் இந்த இடத்தில் இருக்க காரணம் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்

விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி கூட்டணி திரைப்படம் :

இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, செக்க சிவந்தது வானம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்தாக தற்போது, கதாநாயகனாக புது படத்தில் இணைந்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை போலவே சாய் பல்லவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் 64-வது படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இல்லையா? வைரலாகும் தகவல்

இந்த படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மையில்லை இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படம் குறித்த பதிவு:

இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை இயக்குநர் மணிரத்னம் ஏற்கனவே முடித்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கான டெஸ்ட் லுக் எல்லாமே முடிவடைந்ததாம். நடிகை சாய் பல்லவி தமிழில் டி55 படத்தில் தற்போது நடித்துவரும் நிலையில், இதையடுத்து மணிரத்னம் இயக்கத்திலும் புது படத்தில் இணைகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படமானது மணிரத்னத்தின் தொடர் தோல்விக்கு பிறகு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்