கூலி படத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்க நீங்கதான் காரணம் தலைவரே – ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

Lokesh Kanagaraj : கூலி படத்தின் வெளியீட்டில் பிசியாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த ஒரு வாரமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தில் பணிபுரிந்தவர்கள் குறித்து தினமும் ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கூலி படத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்க நீங்கதான் காரணம் தலைவரே - ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ்

Published: 

13 Aug 2025 14:21 PM

தமிழ் நாடு மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த் (Rajinikanth) ரசிகரக்ள் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது கூலி படத்திற்காகதான். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் கூலி படத்திற்கு அனைத்திற்கும் மேலாக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். முன்னதாக கமல் ஹாசனை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கூலி படமும் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் படம் நாளை 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் படத்தின் புரமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதை சமூக வலைதளங்களைப் பார்க்கும் போது தெரிகிறது.

ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்:

கடந்த சில நாட்களாக கூலி படத்திற்காக தன்னுடன் பணியாற்றியவர்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கூலி எப்போதும் என் பயணத்தில் ஒரு சிறப்புப் படமாக இருக்கும், மேலும் இந்தப் படம் இப்படி அமைந்ததற்குக் காரணம், அனைவரும் தங்கள் இதயங்களையும் அன்பையும் அதில் கொட்டியதற்குக் காரணம், தலைவர் ரஜினிகாந்த் சார்.

இந்த வாய்ப்புக்கும், படத்திற்கு முன்பும் வெளியேயும் நாங்கள் பகிர்ந்து கொண்ட உரையாடல்களுக்கும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பேன். இவை நான் எப்போதும் போற்றும், மறக்க முடியாத தருணங்கள். எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்ததற்கு என் இதயத்தில் இருந்து நன்றி, மேலும் நாங்கள் உங்களை நேசிக்கவும், உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களுடன் வளரவும் 50 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கடந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தலைவா. என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… கூலி படத்தின் மோனிகா பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூசி – நெகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக கலக்கிய படங்களின் லிஸ்ட் இதோ!