Lokesh Kanagaraj : ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து வெப் தொடர்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
Lokesh Kanagaraj Web Series : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் விக்ரம். இந்த படத்தில் இடம்பெற்ற ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து வெப் தொடரை உருவாக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் வசந்தி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) , தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் தற்போது வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும், சுமார் 36 நாடுகளுக்கும் மேல் இப்படம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. வெளியீட்டிற்கு சில நாட்களே உள்ள நிலையில் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட படத்தில் பணியாற்றிய பலரும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் வெப் தொடரை (Web series) உருவாக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இவர்தான் இயக்கினார். இதில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இதில் நடிகை வசந்தி நடித்திருந்தார். இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தை வைத்து வெப் தொடரை உருவாக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அது குறித்து விவரமாகத் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படங்க : டைம் ட்ராவல்.. சையின்ஸ் பிக்ஷன்.. கூலி டிரெய்லர் மீதான ரசிகர்கள் கருத்து – லோகேஷ் கனகராஜ் விளக்கம்
ஏஜென்ட் டீனா வெப் தொடர் குறித்தது லோகேஷ் கனகராஜ் பேச்சு
அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடன் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த லோகேஷ், “இந்த எல்சியூவை வைத்து வெப் சீரிஸையும் உருவாக்கலாம் என திட்டமிட்டு வருகிறேன். விக்ரம் படத்தில் உள்ள ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து, அந்த வெப் தொடரை வேறு ஒரு இயக்குநரை வைத்து உருவாக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. எல்சியூ படங்களை நான் ஒருத்தன் மட்டும் இயக்காமல், மற்ற இயக்குநர்களையும் இதில் இணைத்து, உருவாக்குவதற்கு விரும்புகிறேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
இதையும் படங்க : பராசக்தி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்க வேண்டியது – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெப் தொடர் பற்றி பேசிய வீடியோ :
#LokeshKanagaraj Recent Confirm ✅ #LCU – Web Series
– We are planning to make a web series based on the character of #AgentTina. Another director is going to direct it.
– Let’s start expanding this as #BENZ starts to succeed.
pic.twitter.com/2Flf12RD6U— Movie Tamil (@MovieTamil4) August 5, 2025
லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு- வில், புதிதாக பென்ஸ் திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படமானது லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொகுப்பில் ஒன்றாக உருவாகிவருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவருகிறார். கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களின் வரிசையில், இந்த பென்ஸ் படமானது உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.