லோகா படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இதுதான் –  இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்

Lokah Chapter 1 Chandra: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படம் பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்தப் பாகங்கள் குறித்து இயக்குநர் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

லோகா படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இதுதான் -  இயக்குநர் கொடுத்த சூப்பர் அப்டேட்

லோகா

Published: 

17 Sep 2025 14:39 PM

 IST

மலையாள சினிமாவில் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் லோகா சாப்டர் 1 சந்திரா (Lokah Chapter 1 Chandra). இந்தப் படத்தை இயக்குநர் டாம்னிக் அருண் இயக்கி இருந்தார். மேலும் இயக்குநர் டாம்னிக் அருண் உடன் இணைந்து சாந்தி பாலச்சந்திரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார். சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார். இவருக்குதான் சூப்பர் ஹீரோ பவர் இருப்பது போல படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த சக்தி உடம்பில் வரவேண்டும் என்றால் அவர் எந்த தீய பழக்கத்தையும் செய்யாதவராக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நடிகர்கள் நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன், துர்கா, ரகுநாத் பலேரி, ஜெயின் ஆண்ட்ருஸ், விஜய் ராகவன், சிவாஜி பத்மனாபன் இவர்களுடன் இணைந்து கேமியோ ரோலில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி தற்போது 250 கோடிகள் வரை வசூலித்து பான் இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லோகா பாகம் 2 மற்றும் 3 படங்களின் நாயகன்கள் இவர்கள்தான்:

இந்த நிலையில் லோகா படத்தின் இயக்குநர் டாம்னிக் அருண் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது, லோகா படத்தின் 2-வது பாகத்தில் நாயகனாக நடிகர் டொவினோ தாமஸும் 3-வது பாகத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நாயகனாகவும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்றும் இயக்குநர் டாம்னிக் அருண் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் கேரக்டர் குறித்து நெகிழ்ந்து பேசிய ஷபீர்!

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் டாம்னிக் அருணின் பேட்டி:

Also Read… அனிகா சுரேந்திரனின் செலிபிரிட்டி க்ரஸ் யார் தெரியுமா? அவரே சொன்ன விசயம்!