இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1, லோகா.. இந்த வாரத்தில் ஓடிடி ரிலீஸ்.. எந்த ஓடிடியில், எப்போது பார்க்கலாம்?

This Week Top 5 OTT Release Movies: தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரையரங்குகளில் படங்கள் வெளியாகிவருகிறது. திரையரங்குகளில் வெளியான 4 முதல் 6 வாரங்களுக்குள் ஓடிடியில் படங்கள் வெளியாகிவிடுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் லோகா முதல் இட்லி கடை வரை எந்தெந்த படங்கள், எந்த ஓடிடியில் வெளியாகியது என்பது பற்றி பார்க்கலாம்.

இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1, லோகா.. இந்த வாரத்தில் ஓடிடி ரிலீஸ்.. எந்த ஓடிடியில், எப்போது பார்க்கலாம்?

இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 மற்றும் லோகா திரைப்படங்கள்

Published: 

31 Oct 2025 22:49 PM

 IST

இட்லி கடை திரைப்படம் : தனுஷின் (Dhanush) முன்னணி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படம் இட்லி கடை (Idli Kadai) . இதில் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது பாரம்பர்ய உணவு விடுதி மற்றும் சொந்த ஊர் தொடர்பான எமோஷனல் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. தனுஷ் இந்த படத்தில் தனது கதாபாத்திரமாக நடிக்காமல், வாழ்ந்தார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இப்படத்தின் காட்சிகள் மற்றும் இவரின் நடிப்பும் மிகவும் அற்புதமாக இருந்தது. மேலும் இப்படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசைதான்.

இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியான நிலையில், கடந்த 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகிவருகிறது. இந்த வீக் என்டில் குடும்பத்துடன் மறக்காமல் பாருங்க.

இதையும் படிங்க: 23 வருடங்கள்.. விக்ரம் எடுத்த முக்கிய முடிவு.. வெற்றி தேடி வருமா?

இட்லி கடை ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து வெளியான பதிவு :

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்

கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் முன்னணி நடிப்பில் வெளியான படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் ருக்மிணி வசந்த் இணைந்து நடித்திருந்தனர் மேலும் இதில் முக்கிய வேடத்தில் ஜெயராம் நடித்திருந்தார். சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம், உலகளாவிய வசூலில் சுமார் ரூ 800 கோடிகளையும் கடந்து வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படமானது இன்று 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிவருகிறது.

காந்தாரா சாப்டர் 1 ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான பதிவு :

லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம்

பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் வெளியான படம் லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandhra) . இப்படத்தை மலையாள இயக்குநர் டோமினிக் அருண் இயக்கியிருந்தார். இந்த படமானது யக்ஷி (நீலி) கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ

இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில், படத்தின் தொடர்ச்சியும் உருவாகிவருகிறது. இப்படம் கடந்த 2025 ஆகஸ்ட் 28 ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், 6 வாரங்களுக்கு பின், இன்று 2025 அக்டோபர் 31ம் தேதியில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

பிளாக்மெயில் திரைப்படம்

நடிகர் ஜி.வி. பிரகாஷின் அதிரடி நடிப்பில் கடந்த 2025 செப்டம்பர் 12ம் தேதியில் வெளியான படம் பிளாக்மெயில் (Blackmail). இந்த திரைப்படத்தை இயக்குநர் மு. மாறன் இயக்க நடிகர்கள் பிந்து மாதவி, ஸ்ரீகாந்த், தேஜு அஷ்வினி என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.  க்ரைம் திரில்லர் தொடர்பான கதையில் திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது சிம்ப்ளி சவுத் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிஸ் திரைப்படம் :

நடிகர் கவின் ராஜ் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கூட்டணியில் வெளியான படம் கிஸ் (Kiss). இப்படத்தை நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி காதல் கதைக்களத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது. இப்படம் வரும் 2025 நவம்பர் 7ம் தேதியில் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.