என் மகளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்… ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது லெஜண்ட் சரவணனின் லீடர் பட டீசர்!

Legend Saravanans Leader Movie Official Teaser Out Now | பிரபல தொழிலதிபராக வலம் வந்த லெஜெண்ட் சரவணன் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடித்துள்ள லீடர் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

என் மகளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்... ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது லெஜண்ட் சரவணனின் லீடர் பட டீசர்!

லீடர்

Published: 

05 Mar 2026 11:24 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா பணியைத் தொடங்கியவர் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் காக்கிச் சட்டை, கொடி மற்றும் பட்டாசு ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருடன்.

நடிகர் சூரி இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் தற்போது நடிகர் லெஜண்ட் சரவணன் உடன் கூட்டணி வைத்துள்ளார். லீடர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

வெளியானது லெஜண்ட் சரவணனின் லீடர் பட டீசர்:

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது என்பது படத்தின் டீசரைப் பார்க்கும் போதே தெரிகிறது. இந்தப் படத்தில் நடிகர் லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, ஆதித்யா கதிர் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு – என்ன காரணம்?

லெஜண்ட் சரவணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வாடிவாசல் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி