இயக்குநர் நெல்சனிடம் அன்பான கோரிக்கை வைத்த லெஜெண்ட் சரவணன் – வைரலாகும் வீடியோ!

Legend Saravanan said his Favorite director is Nelson Dilipkumar: தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதற்காக தனது 50 வயத்திற்கு பிறகு நடிக்க வந்தார். இவரை முதலில் பலர் கிண்டலடிட்த்து இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் லெஜெண்ட் சரவணன்.

இயக்குநர் நெல்சனிடம் அன்பான கோரிக்கை வைத்த லெஜெண்ட் சரவணன் - வைரலாகும் வீடியோ!

லெஜெண்ட் சரவணன்

Published: 

18 Mar 2026 18:06 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் டார்க் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் டார்க் காமெடியை மையமாக வைத்தே வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனையும் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் பணிகளில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் பிசியாக பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியான பிறகு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகளில் ஈடுபட உள்ளார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநர் நெல்சனிடம் அன்பான கோரிக்கை வைத்த லெஜெண்ட் சரவணன்:

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் லெஜெண்ட் சரவணன் விழா ஒன்றில் பேசிய போது தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார் என்று தெரிவித்தார். மேலும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மிகவும் பிசியாக உள்ளார். அதனால் நெல்சன் பாஸ் உங்கள் படங்களில் ஏதேனும் கேமியோ ரோல் இருந்தால் கொடுங்கள். அது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷெடியூல் என்றாலும் பரவாயில்லை என்று லெஜெண்ட் சரவணன் தெரிவித்து இருந்தார் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் D55 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் லெஜெண்ட் சரவணனின் பேச்சு:

Also Read… ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படத்திற்கு தனுஷ் கொடுத்த விமர்சனம் இதுதான் –  வைரலாகும் பதிவு!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்