Legend Saravana: லெஜெண்ட் சரவணாவின் 2வது படம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!
Legend Saravana New Movie Update: தமிழகத்தில் பிரபல தொழிலதிபர்களின் ஒருவராக இருப்பவர் லெஜெண்ட் சரவணா. இவர் ஏற்கனவே தி லெஜெண்ட் என்ற நாயகனாக அறிமுகமாகியிருந்தார். தற்போது இவர் நடித்துவரும் 2வது படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

லெஜண்ட் சரவணா 2வது படம்
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தவர் லெஜெண்ட் சரவணா (Legend Saravanan). இவர் தமிழகத்தில் பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் சரவணா ஸ்டோர்ஸ் என்ற மிக பிரம்மாண்ட வணிக வளாகத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மிகப்பெரிய பிஸ்னஸ் மேனனான இவர் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடிகராக நடித்துவருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் தமிழில் வெளியான “தி லெஜெண்ட்” (The Legend) என்ற படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ஊர்வசி ரவுடேலாவுடன் (Urvashi Rautela) ஜோடியாக நடித்திருந்தார். இவருக்கு முதல் படமானது ஓரளவு வரவேற்கப்பட்டிருந்தது. இப்படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் கதாநாயகனாக 2வது படத்திலும் நடித்துவந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது. தற்போது இப்படத்திலிருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் முதல் பார்வை வரும் 2026 பிப்ரவரி 4ம் தேதியில் மதியம் 2:10 மணிக்கு வெளியாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: கிரைம் திரில்லர் கதையில்.. ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘கா தி ஃபாரஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
லெஜெண்ட் சரவணாவின் 2வது படத்தின் அப்டேட் குறித்த எக்ஸ் பதிவு:
The Storm Begins🌊#TheLegendSaravanaStoresProductions #ProductionNo2 starring @yoursthelegend , First Blow to drop on Feb 04th, (Wednesday) at 2.10 PM✨
A Grand Announcement Loading!
A @Dir_dsk Directorial 🎬
A @GhibranVaibodha Musical 🎵@starlingpayal @andrea_jeremiah… pic.twitter.com/Im5ufciYdB— Legend Saravanan (@yoursthelegend) February 1, 2026
தொழிலதிபரும், நடிகருமான லெஜெண்ட் சரவணா நடித்துள்ள 2வது படத்தை பிரபல இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் மற்றும் கருடன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்படங்களின் வரிசையில் தற்போது லெஜெண்ட் சரவணா நடித்துள்ள 2வது படத்தையும் இயக்கியுள்ளார். லெஜண்ட் சரவணா நடிக்கும் இந்த படமானது சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் மாஸ் கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய நடிகர்கள் ஷாம், பாயல் ராஜ்புட் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏப்ரல் மாதம் வெளியாகிறதா சூர்யாவின் கருப்பு படம்? வைரலாகும் தகவல்
இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை துரை செந்தில் குமார் இயக்கியுள்ள நிலையில், லெஜெண்ட் சரவணாவின் லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமானது சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படும் நிலையில், இந்த 2026ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இப்படத்தின் முதல் பார்வை ரிலீஸின்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.