இது இளைஞர்களின் வெற்றி… வசூலில் கெத்து காட்டும் கென் கருணாஸின் யூத் படம்

Ken Karunas Youth Movie Box Office Collection Viral On Social Media : தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் யூத். இந்தப் படம் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது இளைஞர்களின் வெற்றி... வசூலில் கெத்து காட்டும் கென் கருணாஸின் யூத் படம்

யூத் படம்

Published: 

30 Mar 2026 13:38 PM

 IST

நடிகர்கள் கருணாஸ் மற்றும் கிரேஸ் கருணாஸின் மகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் கென் கருணாஸ். இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன்படி கென் கருணாஸ் குழந்தை நட்சத்திரமாக நடிகர் தனுஷின் மகனாக நடித்த அரசன் படம் ரசிகர்கலிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கென் கருணாஸை தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் இரண்டு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த கென் கருணாஸ் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள படம் யூத்.

அதன்படி இந்தப் படத்தின் மூலம் கென் கருணாஸ் நாயகனாக மட்டும் இன்றி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார் கென் கருணாஸ். பள்ளி கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடி வருகிறார். மேலும் படத்தில் இயக்குநர் மற்றும் நாயகனாக மட்டும் இன்றி பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் அறிமுகம் ஆகி உள்ளார் கென் கருணாஸ்.

இது இளைஞர்களின் வெற்றி… வசூலில் கெத்து காட்டும் யூத் படம்:

இந்த நிலையில் இந்த யூத் படம் கடந்த 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் எத்தனை கோடிகள் வசூலித்துள்ள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் உலக அளவில் இதுவரை 50 கோடிகள் ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Kara Movie: கர படத்திற்காக தனுஷ் சார் சொன்ன விஷயம்.. நான் பிரம்மித்துபோனேன்- இயக்குநர் விக்னேஷ் ராஜா!

யூத் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்காமல் மிஸ் செய்துவிட்டேன் – அப்பாஸ் ஓபன் டாக்

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..