யூத் படத்தை நான்தான் இயக்கவேண்டும் என முடிவெடுக்க வைத்ததே அவர்தான் – கென் கருணாஸ் பேச்சு!

Ken Karunaas Inspiration: கென் கருணாஸ் இயக்கத்தில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் யூத் என்ற திரைப்படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், யூத் படம் இயக்கவேண்டும் என்ற முடிவெடுக்க வைத்தவர் யார் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

யூத் படத்தை நான்தான் இயக்கவேண்டும் என முடிவெடுக்க வைத்ததே அவர்தான் - கென் கருணாஸ் பேச்சு!

கென் கருணாஸ்

Updated On: 

09 Mar 2026 15:08 PM

 IST

இயக்குநராகவும், நாயகனாகவும் கென் கருணாஸ் (Ken Karunaas) அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் யூத் (Youth). இவர் ஏற்கனவே தமிழில் சில படங்களில் முக்கிய வேடம் மற்றும் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். அந்த வரிசையில், நடிகர் பிரதீப் ரங்கநாதனை (Pradeep Ranganathan) போலவே தனது இயக்கத்திலே, தான் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் 2002ம் ஆண்டில் வெளியான யூத் படத்தின் அதே டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனிஷிமா அனில்குமார், மீனாக்ஷி தினேஷ் மற்றும் ப்ரியா யாதவ் என மூன்று நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இதில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் தேவதர்ஷினி இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இதன் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய கென் கருணாஸ், யூத் படத்தை இயக்க தன்னை முடிவெடுக்க வைத்தவர் யார் என்பது பற்றி தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் ஆதரவு பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காதல் தோல்வியின் போது ரக்‌ஷித் ஷெட்டியின் படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன் – கென் கருணாஸ்

யூத் திரைப்படம் இயக்க காரணமாக இருந்தவர்கள் குறித்து கென் கருணாஸ் பேச்சு:

அந்த நேர்காணலில் கென் கருணாஸ் பேசுகையில், “நான் யூத் படம் இயக்கப்போகிறேன் என சொன்னதும், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருமே என்னிடம், “நீ உறுதியாக இருக்கிறியா?” என்றுதான் கேட்டார்கள். யாரையுமே பண்ணவேண்டாம் என சொல்லவே இல்லை. நீ தயாரா இருக்கியார்? என்றுதான் கேட்டார்கள். நானும் உடனே, இந்த மாதிரி படம் எடுத்துவிடுவேன், ஏனென்றால் நானும் இதை போலவே வாழ்ந்திருக்கிறேன். மற்றபடி வேறுமாதிரியான படத்தை இயக்கமுடியுமா? என்பதுதான் சந்தேகம்.

இதையும் படிங்க: மீண்டும் தள்ளிப்போகும் ஜன நாயகன் சென்சார் விவகாரம்… ரிவைசிங் கமிட்டி பார்வை ஒத்திவைப்பு?

ஆனால் என்னை நீதான் அந்த படத்தை இயக்கவேண்டும் என சொன்னது ஆர்.ஜே.பாலாஜி சார்தான். நான் அவரிடம் கதையைதான் சொன்னேன், கதை சொன்னதும் கட்டிபிடிச்சிட்டு, நீதான் இயக்கவேண்டும் என சொன்னாரு. என்னை இவ்வாறு ஒரு முடிவை எடுக்கவைத்ததே ஆர்.ஜே.பாலாஜிதான். அவர் அன்னைக்கு அப்படி சொல்லலைனா நான் இப்படி படத்தை இயக்கியிருப்பேனா என தெரியாது. அவரின் அந்த வார்த்தைகள் எனக்கு உத்வேகத்தை கொடுத்தது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

யூத் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொடர்பாக கென் கருணாஸ் வெளியிட்ட பதிவு:

இந்த யூத் படமானது வித்தியாசமான கதையில் தயாராகியுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் இது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..