சிவகார்த்திகேயனுடன் இணையும் வைரல் நடிகை? இணையத்தில் கசிந்த தகவல்

Sivakarthikeyan Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து மதராசி படம் மற்றும் பராசக்தி படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்தப் படத்தில் நடிகர் சிவகார்த்தியேகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த அப்டேட் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயனுடன் இணையும் வைரல் நடிகை? இணையத்தில் கசிந்த தகவல்

சிவகார்த்திகேயன்

Published: 

08 Jun 2025 18:46 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசி படத்தில் நடித்து முடித்தார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கு சிவகார்த்திகேயன்?

மதராசி படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு உடன் சிவகர்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ளது. பின்னர் இந்தப் படம் நடக்குமா என்ற கேள்வி எழும் அளவிற்கு சிவகார்த்திகேயன் அடுத்த அடுத்த இயக்குநர்களுடன் இணைந்து படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டும் இன்றி இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ட்ராகன் படத்தில் நாயகியாக நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயனின் எக்ஸ் தள பதிவு:

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்தியேகன்:

மதராசி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா உடன் தனது 25-வது படத்திற்காக இணைந்தார். இந்தப் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.