கெஸ்ட் இல்ல எவிக்ஷனுக்கு வந்தேன்.. அடுத்தடுத்த அதிர்ச்சியை கொடுத்த கவின்.. இந்த வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் யார்?

Bigg Boss 9 Midweek Eviction: தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக்பாஸ் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 7 வாரங்களான நிலையில், விருந்தினராக கவின் கலந்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

கெஸ்ட் இல்ல எவிக்ஷனுக்கு வந்தேன்.. அடுத்தடுத்த அதிர்ச்சியை கொடுத்த கவின்.. இந்த வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் யார்?

கவின் மற்றும் பிக்பாஸ் 9 தமிழ்

Published: 

22 Nov 2025 14:57 PM

 IST

கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், இதுவரை 6 வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது தனியார் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் டிவியில் திறமும் இரவு 9 :30 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியானது மொத்தம் 20 போட்டியாளர்ளுடன் தொடங்கிய நிலையில், மேலும் வைல்ட் கார்ட் எண்டரியாகவும் 4 போட்டியாளர்கள் நுழைந்திருந்தனர். இதில் கடந்த வாரங்களில் பல போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது மொத்தமாக 17 போட்டியாளர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் இருந்துவருகிறனர். அதிரடி டாஸ்க் , ஃபன் கேம்ஸ் என இந்த நிகழ்ச்சியானது தற்போதுதான் சுவாரஸ்யமாக இருந்துவருகிறது. இதில் நிஜ ஜோடியான பிராஜின் மற்றும் சாண்டரா கலந்துகொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஆதரவு இருந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துவருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில், நடிகர் கவின் (Kavin) இந்த நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக நுழைந்தது போல் வீடியோ வெளியானது. ஆனால் அவர் கையில் மிட்வீக் ஏவிக்ஷனுக்காக (Midweek Eviction) வந்ததாக தெரிவித்துள்ளார். இது போட்டியாளர்கள் மத்தியிலும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2025 நவம்பர் 22ம் தேதியான நிலையில், இன்று நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொள்வார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த படக்குழு!

மிட்வீக் எவிக்ஷன் தொடர்பாக கவின் பிக்பாஸ் சீன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ :

இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் வெளியேறிய நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த கனி, இந்த வாரத்தில் முதல் போட்டியாளராக வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுடன் இந்த நிகழ்ச்சியானது தொடர்ந்துவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது யார்?

இந்த நிகழ்ச்சியானது தொடங்கி இந்த வாரத்துடன் 7 வாரங்கள் ஆகியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக 7 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இணையத்தை மக்களிடையே எடுக்கப்பட்ட வாக்கு சேகரிப்பில் கடைசி நிலையில் கெமி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லாஸ்ட் குட்டி ஸ்டோரி… தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ‘இசைவெளியீட்டு விழா’ எப்போது? எங்கு நடைபெறுகிறது.. அறிவிப்பு இதோ!

இவருக்கு அடுத்த நிலையில் வியானா இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த வாரத்தில் 2 ஏவிக்ஷன் இருந்தால் இந்த போட்டியாளர்கள் வெளியேறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சுவாரஸ்ய திருப்பங்களுடன் இன்றைய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Related Stories
Thalaivar173: யாரும் எதிர்பார்க்காத காம்போ.. ரஜினிகாந்த்தின் தலைவர்173 படத்தை இயக்குபவர் இவரா?
Vijay Sethupathi: அந்த படம் எனக்கு அளவவு பெரிய வெற்றியை கொடுக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை- விஜய் சேதுபதி!
கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த படக்குழு!
Retta Thala: அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் 2வது பாடலை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் மத்தியில் வைரல்!
அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?
Jana Nayagan: லாஸ்ட் குட்டி ஸ்டோரி… தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ‘இசைவெளியீட்டு விழா’ எப்போது? எங்கு நடைபெறுகிறது.. அறிவிப்பு இதோ!
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி
பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி, ரூ.7 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இதய நோய் முதல் உயர் ரத்த அழுத்தம் வரை அனைத்தையும் தடுக்கும் ஒரு ஜூஸ் - என்ன தெரியுமா?
இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!