கவினின் கிஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
Kiss Movie: நடிகர் கவின் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் கிஸ். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்த்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிஸ் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிஸ்
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பின்பு சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் கவின் (Actor Kavin). இவர் சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். இந்த நிகழ்ச்சிகுப் பிறகு தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் கவின். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா, ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் ஆகிய 4 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களில் வெற்றியால் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மாறினார் நடிகர் கவின். மேலும் இந்தப் படங்களில் வெற்றியால் நடிகர் கவினின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களில் அப்டேட்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது.
நடிகர் கவினின் கிஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு:
இந்த நிலையில் தற்போது நடிகர் கவினின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் இந்த கிஸ் படத்தை சதீஸ் கிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ளார். டான்ஸ் மாஸ்டரான இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… கூலி படத்தில் 4 நிமிட காட்சி நீக்கம்… சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கலாம்!
கிஸ் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Kiss is all set to leave it’s mark on September 19 💋#KissFromSept19@Kavin_m_0431 @mynameisraahul @dancersatz @preethiasrani__ @dop_harish @SureshChandraa @peterheinoffl #MohanaMahendiran @editorrcpranav @gopiprasannaa @iamgunashekar @sonymusicsouth @bypostoffice… pic.twitter.com/PF2zOt5S6S
— raahul (@mynameisraahul) August 20, 2025
Also Read… பூஜையுடன் தொடங்கியது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் புது படம்