Kiss Movie: கவினுக்கு ‘கிஸ்’ படம் வெற்றியை கொடுக்குமா? விமர்சனம் இதோ!

Kiss Movie X Reviews: தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதியியல் வெளியாகியிருக்கும் படம்தான் கிஸ். இந்த படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Kiss Movie:  கவினுக்கு கிஸ் படம் வெற்றியை கொடுக்குமா? விமர்சனம் இதோ!

கவினின் கிஸ் திரைப்படம்

Published: 

19 Sep 2025 16:56 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan). இவர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் முதல் படம்தான் கிஸ் (Kiss). இந்த படத்தில் இளம் நடிகரான கவின் (Kavin) நடித்திருக்கிறார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து 2025 மார்ச் மாதத்தில் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சசிகுமாரின் அயோத்தி (Ayothi) படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிஸ் படமானது ரொமாண்டிக் காதல் கதைக்களத்துடன் கூடிய படமாக உருவாகியிருந்த நிலையில், இன்று 2025 செப்டம்பர் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், இதற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் என்ன என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : லோகாவில் நஸ்லென் போன்று நானும் நடிக்கிறேன்.. ஆனால் – நடிகர் கவின் பகிர்ந்த விஷயம்!

கவினின் கிஸ் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள்

கவினின் கிஸ் படமானது முற்றிலும் மாறுபட்ட கதையில் வெளியாகியுள்ளதாம். இப்படத்தில் கவின், விடிவி கணேஷ் மற்றும் விஜே விஜய் போன்றவர்களின் காமினேஷன் அருமையாக வந்திருக்கிருக்கிறதாம். மேலும் அறிமுக இயக்குநராக நுழைந்த சதீஷ் கிருஷ்ணனின் இயக்கத்தில் நல்ல படமாக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிஸ் படத்தில் கவினின் நடிப்பு எப்படி இருக்கு?

இப்படத்தின் முதல் பாதியில் நடிகர் கவின் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளாராம். மேலும் இப்படத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் காம்போ நன்றாக வந்துள்ளதாம். நடிகர் கவின் பக்கா ஸ்டார் ஹீரோ மெட்டிரியல் என்றும் ரசிகர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஜன நாயகனின் க்ளைமேக்ஸ் காட்சி.. ஹெச்.வினோத் செய்திருக்கும் தரமான சம்பவம்!

கவினின் கிஸ் படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா?

கவினின் கிஸ் படமானது முழுவதுமாக ரொமாண்டிக் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான படங்களில் சிறந்த கதைக்களம் கொண்ட படமாக இருக்கிறதாம். படத்தில் கவினின் நடிப்பு மற்றும் படத்தின் ஸ்கிரீன்ப்லே நன்றாக உள்ளதாகவும் இந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.