இப்படி எல்லாம் ஒரு புகார் கொடுப்பாங்களா? இந்தியில் இந்த காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

Kathal - A Jackfruit Mystery Movie OTT Update: இந்தி சினிமாவில் ஒரு சட்டையர் காமெடி த்ரில்லர் படமாக வெளியானது காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி. இந்தப் படத்தை தற்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இப்படி எல்லாம் ஒரு புகார் கொடுப்பாங்களா? இந்தியில் இந்த காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி

Published: 

04 Apr 2026 21:14 PM

 IST

இந்தியாவைப் பொருத்தவரை சாதி மற்றும் மதங்களை அடிப்படையாக வைத்து மக்களிடையே பல ஏற்றத்தாழ்வுகள் இருந்து வருவருவது குறிப்பிடத்தக்கது. அதில் தென்னிந்தியாவான தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியப் பகுதிகளில் குறைவாக உள்ளது என்று சொல்லலாம். ஆனால் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவில் அதிக அளவில் சாதி மற்றும் மதங்களை மையமாக வைத்து பல ஏற்றத்தாழ்வுகள் அதிக அளவில் இருக்கிறது. 2-ம் நூற்றாண்டிலும் அதிக அளவில் இருக்கிறது என்பதே நிதர்சமான உண்மை. இது தொடர்பாக பலப் படங்களில் வெளிப்படையாக காட்டப்பட்டு இருந்தாலும் அந்த ஏற்றத்தாழ்வு மாறவில்லை. இந்த சமூகத்தில் தாழ்ந்த சாதி என்று கூறப்படுபவர்கள் படிப்பில் பெரிய அளவில் சாதித்தாலும் அவர்களுக்கு ஏற்ற மரியாதை கிடைக்காது. இது இந்தியாவிற்கு சட்டத்தையே எழுதிக் கொடுத்த அம்பேத்கருக்கே நடந்தது என்பது பலரும் அறிந்த ஒன்றே.

இந்த நிலையில் காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி என்ற படம் இந்தி சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு 19-ம் தேதி மே மாதம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர்கள் சான்யா மல்ஹோத்ரா, ஆனந்த் வி ஜோஷி, குர்பால் சிங், நேஹா சரஃப், சஞ்சய் தாதிச், விஜய் ராஸ், ராஜ்பால் யாதவ், ரகுபீர் யாதவ், கோவிந்த் பாண்டே, பிரிஜேந்திர கலா, அபூர்வா சதுர்வேதி, ரவி ஜான்கல், ஏக்தா சிங், லக்கி கான், ஆராத்யா திவாரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் சான்யா மல்கோத்ரா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டராக இருக்கிறார். ஆனால் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காகவே அவருக்கு கீழே வேலை செய்பவர்களும் மதிக்கமாட்டுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவரின் டீமிற்கு ஒரு வழக்கு வருகிறது. அது என்ன என்றால் அந்த பகுதியில் வசிக்கும் எம்.எல்.ஏ வீட்டில் இருந்த தோட்டத்தில் பலாப்பழ மரத்தில் இருந்து இரண்டு பலாப்பழங்கள் காணாமல் போனதை கண்டுபிடிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள்.

Also Read… ரிலீஸ் கன்ஃபார்ம்… இன்று மாலை வெளியாகிறது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்

இந்த திருட்டு வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் போது அந்த தோட்டத்தில் வேலை செய்தவரின் மகள் காணாமல் போனதும் தெரியவருகிறது. இதில் பலாப்பழத்தை முதலில் கண்டுபிடிப்பதா அல்லது அந்த சிறுமியை கண்டுபிடிப்பதா என்ற சூழ்நிலையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சான்யா மல்கோத்ரா எந்த முடிவை எடுக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் நேரடியாக் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது காணக்கிடைக்கின்றது.

Also Read… டீசரைப் பார்த்து மொத்த படத்தையும் முடிவு செய்யாதீர்கள் – TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா

Follow Us
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்