Neelira: போருக்குள் திருமணம்.. கார்த்திக் சுப்புராஜ் – ராணாவின் ‘நீளிரா’ படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியானது!
Neelira Movie Trailer: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் மற்றும் ராணாவின் தயாரிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் நீளிரா. இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதியில் வெளியாகின்ற நிலையில், இதை ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீளிரா திரைப்பட ட்ரெய்லர்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் (Karthik Subburaj) இயக்கத்தில் தமிழில் சூர்யா (Suriya) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை பல்வறு பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ரெட்ரோ (Retro). இதில் சூர்யா நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிப்பதில் கார்த்திக் சுப்புராஜ் இறங்கியுள்ளார். 29 தி பிலிம், அங்கம்மாள் மற்றும் தற்போது நீளிரா (Neelira) போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த நீளிரா திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து, நடிகர் ராணா டகுபதியும் (Rana Daggubati) தயாரித்துள்ளார். இந்த படம் அதிரடி ஆக்ஷன், எமோஷனல் மற்றும் உண்மை கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் சோமித்ரன் (Someetharan) இயக்க, நவீன் சந்திரா (Naveen Chandra), ரூபா கொடுவாயார் போன்ற பிரபலங்கள் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது ஸ்ரீலங்காவில் நடந்த உண்மையான போருக்கு நடுவே நடந்த திருமணம் ஒன்றை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Faces Of Kara.. தனுஷின் கர படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக புரோமோ வெளியீடு!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட நீளிரா திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த பதிவு:
Here is #NeeliraTrailer
A story from the heart of a Warchild on to Big Screens ❤️❤️
Please do watch it in theatres from April 3rd!! https://t.co/tjv6fBo2sB#Neelira Releasing worldwide on April 3rd in Theatres.@someeth @Naveenc212 @sananth #KapilaVenu @roopakoduvayur…
— karthik subbaraj (@karthiksubbaraj) March 27, 2026
நீளிரா படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு :
இந்த ட்ரெய்லரை பார்க்கையில், ஒரு பெண் தனது திருமணத்திற்காக தயாராகிவருகிறார். அப்போது ஸ்ரீலங்காவில் போர் கலவரம் ஏற்படுகிறது. அந்த பெண்ணின் திருமணத்திற்கு எல்லாம் பிரம்மாண்டமாக தயாராகியிருந்தும், போர் காரணமாக ராணுவ வீரர்கள் அங்கு தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். அதிலும் நடிகர் நவீன் சந்திரசேகர் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் ஒன் லைன் கதை என்னவென்றால், ஒரு போருக்கு மத்தியில் நடக்கும் திருமணம் என்பதுதான்.
இதையும் படிங்க: அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?
இந்த நீளிரா திரைப்படமானது இதுவரையிலும் வெளியாகத தமிழ் படத்தை போலவே தயாராகியுள்ளது. இந்த படத்தில் அதிகம் அறிமுக நடிகர்களே நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே என்பவர் இசையமைத்துள்ளார். இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 3ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அதை முன்னிட்டு இன்று 2026 மார்ச் 27ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.