தீபாவளியை முன்னிட்டு புது ட்ரெய்லரை வெளியிட்டது காந்தாரா சாப்டர் 1 படக்குழு

Kantara Chapter 1 | கன்னட சினிமாவில் வெளியாகி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் காந்தாரா சாப்டர் 1. இந்தப் படத்தின் தீபாவளி ட்ரெய்லர் என புது ட்ரெய்லர் ஒன்றை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு புது ட்ரெய்லரை வெளியிட்டது காந்தாரா சாப்டர் 1 படக்குழு

காந்தாரா சாப்டர் 1

Published: 

16 Oct 2025 15:24 PM

 IST

கன்னட சினிமாவில் நடிகர் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishab Shetty). அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் நடிகராக பலப் படங்களில் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நாயகனாக மட்டும் இன்றி வில்லன், சிறப்புக் கதாப்பாத்திரம் என பலவற்றை ஏற்று நடித்துள்ளார். தொடர்ந்து நடிகராக நடித்து வந்த ரொஷப் ஷெட்டி கடந்த 2016-ம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் இயக்குநராகாவும் வலம் வரத் தொடங்கினார். அதன்படி இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ரிக்கி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார். அது மட்டும் இன்றி ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கிருக் பார்ட்டி என்ற படத்தின் மூலமாக தான் நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் நாயகியாக சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் காந்தாரா. இந்தப் படத்தில் இவரே நடிக்கவும் செய்தார். இந்தப் படம் காந்தாரா என்ற கடவுளை பற்றி எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த சமூகத்தின் கலாச்சாரத்தை மையமாக வைத்து வெளியாகி இருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது கன்னட சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் இல்லை உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி ஸ்பெஷல் காந்தாரா சாப்டர் 1 படக்குழு வெளியிட்ட புது ட்ரெய்லர்:

இந்த நிலையில் காந்தாரா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் முன்கதை என்று படக்குழு தற்போது காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் தீபாவளி ஸ்பெஷல் ட்ரெய்லர் என்று நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி புது ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் AK 64 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படக்குழு