Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி – இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Parasakthi Movie Update :சிவகார்த்திகேயனின் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகி வருவது பராசக்தி திரைப்படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்திலிருந்து சிறப்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தை பிரபல பெண் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இறுதிசுற்று , சூரரைப்போற்று (Soorarai pottru) போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான பராசக்தி படத்தையும் இவர்தான் இயக்கிவருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் சோமசுந்தரம் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 1960ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாம். இந்த படமானது இந்தி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார். இது அவர் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பராசக்தி திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை சரிகமா சவுத் (Saregama South) என்ற நிறுவனமானது பெற்றுள்ளதாம். இது தொடர்பான பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: மற்ற மொழிகளை விட தமிழ் சினிமாவில் நடிப்பது எப்பவும் பெருமையானது – நடிகை மம்தா மோகன்தாஸ்
ஆடியோ ரிலீஸ் உரிமை தொடர்பாக பராசக்தி படக்குழு வெளியிட்ட பதிவு :
The sound of history comes alive 🔊#Parasakthi – Audio rights bagged by @saregamasouth 📀#ParasakthiFromPongal #ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya… pic.twitter.com/xEnYW3cdwx
— DawnPictures (@DawnPicturesOff) October 14, 2025
இந்த பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க, டான் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துவருகிறார். மேலும் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இன்பன் உதயநிதி வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சார் மற்றும் சூர்யா சார் இருவரையும் ரொம்ப ரசிப்பேன்- மமிதா பைஜூ!
இந்த பராசக்தி படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படமானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகி, சரியாக 6 நாட்களில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இணையதளங்களில் பராசக்தி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக சில வீடியோக்கள் வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா உட்பட படக்குழு அனைவரும் இடம்பெற்றிருந்தனர். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலாவும் கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பான வீடியோவும் வெளியானது. ஆனால் படக்குழு இதுகுறித்து எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.