Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

T Rajendran: வெற்றிமாறன் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. டி. ராஜேந்திரன் கலகல பேச்சு!

T Rajendran Praised Vetrimaaran: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவந்தவர் டி. ராஜேந்திரன். இவர் தற்போது சினிமாவில் அவ்வப்போது படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், இயக்குநர் வெற்றிமாறனை புகழ்ந்து பேசியுள்ளார்.

T Rajendran: வெற்றிமாறன் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. டி. ராஜேந்திரன் கலகல பேச்சு!
வெற்றிமாறன், சிலம்பரசன் மற்றும் டி.ராஜேந்திரன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2025 08:30 AM IST

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான இயக்குநர் மற்றும் நடிகராக வலம்வருபவர் டி.ராஜேந்தர் (T.Rajendran). இவர் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தந்தை. தனது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படங்களில் சிலம்பரசனை குழந்தை நட்சத்திரமாக நடிக்கவைத்தார். பின் தனது படத்தின் மூலமாகவே ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், தற்போது வரையிலும் சிலம்பரசன் முன்னணி கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் டி.ராஜேந்திரன் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார்.

அதில் சிலம்பரசனுக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை வாங்குவதற்காக அவர் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிலம்பரசனின் விருதை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) கொடுத்திருந்த நிலையில்,  அதை பெற்றுக்கொண்ட டி. ராஜேந்தர், வெற்றிமாறன் மற்றும் STR49 படத்தை பற்றி பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க : நியூ லுக்கில் சூர்யா.. ஐரோப்பாவில் நடைபெறும் சூர்யா46 பட ஷூட்டிங்!

வெற்றிமாறன் குறித்து டி. ராஜேந்தர் பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் டி. ராஜேந்திரன், ” நான் பெற்றெடுத்த குமரனுக்கு இந்த விருதை கொடுத்திருப்பது வெற்றிமாறன். வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. வெற்றிமாறன் தொட்டதெல்லாம் பொன்னாகும். அவர் தொட்டது என்னாகும், அது பொன்னாகும் என பல படங்ககளை எடுத்து சாதனை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : அந்த படத்தை நான் இயக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்!

வெற்றிமாறன் ஒரு சாதனையாளரும் ஆவார். மேலும் இவர் ஒரு சரித்திரத்தில் இடம்பிடித்த நாயகனும் ஆவார். இப்படிப்பட்ட சாதனையாளருடன், சிலம்பரசன் அமைக்கவுள்ளார் ஒரு கூட்டணி. அந்த கூட்டணியை அமைக்க காரணமே வெற்றிமாறன்தான்” என அந்த மேடையில் வெற்றிமாறனை புகழ்ந்து பேசியிருந்தார் டி. ராஜேந்திரன்.

வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணி பட டைட்டில் அறிவிப்பு பதிவு :

சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகவுள்ள படம் STR49 என அழைக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த் படத்திற்கு அரசன் என்ற டைட்டலை படக்குழு வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நடிகர்கள், மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாகவும் மற்றும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.