கர படத்திலிருந்து வெளியானது கண்ணம்மா என் கண்ணம்மா பாடலின் லிரிக்கள் வீடியோ

Kannamma En Kannamma Lyric Video | நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள் படம் கர. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகைன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து தற்போது சிங்கிள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

கர படத்திலிருந்து வெளியானது கண்ணம்மா என் கண்ணம்மா பாடலின் லிரிக்கள் வீடியோ

கர படம்

Published: 

08 Apr 2026 15:38 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து படங்களை இயக்குவது மற்றும் பாடல்களைப் பாடுவதையும் வழக்கமாக வைத்து உள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மூன்று படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியானது. அதே போல இந்த ஆண்டு குறைந்தது இரண்டு படமாவது திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 30ம் தேதி 2026-ம் ஆண்டு கர படம் நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான போர் தொழில் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வெளியானது கண்ணம்மா என் கண்ணம்மா பாடலின் லிரிக்கள் வீடியோ:

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று படத்தில் இருந்து கண்ணம்மா என் கண்ணம்மா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை நடிகர் தனுஷே எழுதி பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இணையத்தில் வைரலாகும் சூர்யா – நஸ்ரியாவின் கியூட் வீடியோ

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவர் 173 படத்தின் புரோமோ ஷூட் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?