Kamal Haasan: தனது புகைப்படம், பெயரை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு!

Kamal Haasan Files Lawsuit : தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாகவும், அரசியல்வாதியாகவும் இருந்துவருபவர் கமல் ஹாசன். இவர் வர்த்தக ரீதியாக தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த தடை செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Kamal Haasan: தனது புகைப்படம், பெயரை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் வழக்கு!

கமல்ஹாசன்

Published: 

11 Jan 2026 18:16 PM

 IST

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், மாநிலங்களவை எம்.பி-ஆகவும் இருந்துவருபவர் கமல்ஹாசன் (Kamal Hasan). இவரின் நடிப்பிலும் தயாரிப்பிலும் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் நடிகர் கமலின் நடிப்பிலும் எழுத்திலும் இறுதியாக வெளியான படம் தக் லைப் (Thug Life). இது ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து புது படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறார். மேலும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் (Cibi Chakaravarthi) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிக்கவுள்ள தலைவர்173 (Thalaivar173) என்ற படத்தையும் கமல்ஹாசன் தான் தயாரிக்கவுள்ளார். அந்த வகையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.

அவர் அதில் தனது பெயரையும், தனது புகைப்படங்களையும் வர்த்தக ரீதியாக யாரும் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்றும், அதை பயன்படுத்த தடை செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனும் இதுபோன்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்த நிலையில், அவர்களின் வரிசையில் தற்போது கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: கெரியர் பெஸ்ட்.. சிவகார்த்திகேயனின் பராசக்தி பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கமல்ஹாசனின் இந்த வழக்கிற்கான காரணம்

கமல்ஹாசன் திரைத்துறையில் பெரும் ஜாம்பவானாக இருந்துவருகிறார். இந்த நிலையில் நீயே விடை என்ற நிறுவனம் ஒன்று, கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், உலகநாயகன் என்ற பட்டம் மற்றும் அவரின் பிரபலமான வசனத்தை அனுமதியின்றி பயன்படுத்துவதாகவும், இவ்வாறு அதை பயன்படுத்தி டிஷர்ட் மற்றும் சர்ட்டுகளை விற்பனை செய்துவருவதாகவும் கூறி கமல்ஹாசன் வழக்கு பதிவு செய்துள்ளாராம். தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

தணிக்கைக்குழு எதிர்த்தும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்த பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதையும் படிங்க: அபுதாபி கார் ரேஸ் களத்தில் சந்தித்த அஜித் குமார்- அனிருத்.. ரசிகர்களிடையே வைரலாகும் போட்டோஸ்!

இதையடுத்து சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் KH237 என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!