Kamal Haasan : தேசிய விருது.. வெற்றிபெற்ற தமிழ் பிரபலங்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Kamal Haasan Congratulates : 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது அறிவிப்பு நேற்று 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பான் இந்திய மொழி திரைப்படங்கள், இயக்குநர்கள் என பலரும் விருதினை பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழில் தேசிய திரைப்பட விருதை வென்ற பிரபலங்களுக்கு, நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan : தேசிய விருது.. வெற்றிபெற்ற தமிழ் பிரபலங்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

கமல்ஹாசன்

Published: 

02 Aug 2025 16:04 PM

பான் இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் பல திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அரசின் சார்பில், ஆண்டுதோறும் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சிதான் தேசிய திரைப்பட விருது (National Film Awards). இந்நிலையில் இந்த 2025ம் ஆண்டு 71வது தேசிய திரைப்பட விருது (71st National Film Awards) வழங்கும் விழாவானது நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த விழாவை முன்னிட்டு. 2023ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மொழி படங்கள் பலவற்றிற்கும் விருதுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் 2023ம் ஆண்டு விருது அறிவிப்பில், தமிழில் ஒரே படத்திற்குக் கிட்டத்தட்ட 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில் வெளியான பார்க்கிங் (Parking) படத்திற்குதான். இப்படத்திற்குச் சிறந்த தமிழ்ப் படம், சிறந்த திரைக்கதை மற்றும் இப்படத்தின் நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்குச் சிறந்த துணை நடிகர் என 3 விருது கிடைத்துள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது வாத்தி படத்தின் பாடல்களுக்காக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த விருதுகளை வென்ற தமிழ் பிரபலங்களை நடிகர் கமல்ஹாசன் (Kamal Hasan) வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?

தமிழ் பிரபலங்களை வாழ்த்தி கமல் ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் அவர் பார்க்கிங் படமானது 3 விருதுகளை வென்றிருப்பதைக் குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இப்படத்தின் நடிகர் எம்.எஸ். பாஸ்கர், படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் என அவனைவரையும் குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷின் வாத்தி திரைப்படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜிவி. பிரகாஷிற்கு கிடைத்திருந்த நிலையில், அவரையும் குறிப்பிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காகச் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!

மேலும் மலையாளத்தில் நடிகையின் ஊர்வசியும் உள்ளொழுக்கு என்ற படத்திற்காகச் சிறந்த துணை நடிகை விருதை வென்றிருக்கும் நிலையில், அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இது தொடர்பான எக்ஸ் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.