Thug Life: கமலின் ‘தக் லைஃப்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு – வெளியான அறிவிப்பு!

Thug Life Movie Pre-Booking : நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தின் எழுத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல் மற்றும் சிம்பு முன்னணி ஹீரோக்களாக நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, ஜூன் 5ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன் பதிவு 2025, ஜூன் 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

Thug Life: கமலின் தக் லைஃப் படத்தின் டிக்கெட் முன்பதிவு - வெளியான அறிவிப்பு!

தக் லைஃப் படம்

Published: 

31 May 2025 22:45 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி இருந்து வருபவர்கள் கமல் ஹாசன் (Kamal Haasan), சிலம்பரசன்  (Silambarasan) மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர்களின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தைத் தென்னிந்தியப் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருக்கும், இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாகப் பொன்னியின் செல்வன் 2 படமானது வெளியான நிலையில், அந்த படத்தைத் தொடர்ந்து இந்த தக் லைஃப் படத்தை சுமார் ஓராண்டிற்கும் மேலாக இயக்கி வந்தார். இந்த படத்தில் கதையை நடிகர் கமல் ஹாசன் எழுதியுள்ள நிலையில், அதில் சில காட்சிகளை இயக்குநர் மணிரத்னமும் மாற்றியுள்ளார். இதை நடிகர் கமல் ஹாசன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

அப்படிப்பட்ட கோலிவுட்டின் மாபெரும் பிரபலங்களான மணிரத்னம் மற்றும் கமல் ஹாசனின் படைப்பாக இந்த தக் லைஃப் படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் டிக்கெட் பிரீ புக்கிங் 2025, ஜூன் 1ம் தேதி, காலை 08:01 மணிக்குத் தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ;

இந்த தக் லைஃப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில், இந்த தக் லைஃப் படத்தில் சுமார் 9 பாடல்கள் உள்ளது. அதில் முத்த மழை, ஜிங்குச்சா, விண்வெளி நாயகன் மற்றும் மாறா போன்ற பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு பிரம்மாண்ட சினிமா பிரபலங்களில் படைப்பாக இந்த தக் லைஃப் படமானது உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கமல் ஹாசனை கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதைப்போல, நடிகர் சிலம்பரசனின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. இந்த படமானது இரட்டை ஹீரோ படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இவர்களுடன் திரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர் . இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.